தமிழர் தலைவர் ஆசிரியரின் 91ஆவது பிறந்தநாள் கழக இளைஞரணி சார்பில் குருதிக் கொடை

3 Min Read

திராவிடர் கழகம்


தஞ்சை, டிச. 3
– நேற்று (2.12.2023) அன்று காலை 10 மணி அளவில் மாவட்டத் தலைவர் சி.அமர் சிங் தலைமையில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கும், மாநில மாணவர் கழக செயலா ளர் இரா.செந்தூரப்பாண்டி யன் தலைமையில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைகளுக்கும் கழகத் தோழர்கள் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் 91ஆவது பிறந்தநாள் விழாவினை சிறப்பாக கொண் டாடினர்.

குருதிக்கொடை வழங்கல்

காலை 11:30 மணி அளவில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழர் தலைவர் திராவிடர் கழக தலை வர் ஆசிரியர் வீரமணி அவர்க ளின் 91ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் கழக தஞ்சை மாவட்ட இளைஞரணி சார்பில் தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங் தலை மையில் குருதி கொடை வழங் கப்பட்டது. மாநில ஒருங்கி ணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தொடங்கி வைத் தார். மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் இரா.வெற்றிக்குமார், முனைவர் வே.இராஜவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் பேபி ரெ.இரமேஷ், திராவிடர் கழக தஞ்சை மாவட்ட செய லாளர் அ.அருணகிரி, தலைமை கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமி, ஒரத்தநாடு நகர இளைஞரணி செயலாளர் பொறியாளர் ச.பிரபாகரன், தஞ்சை மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ஆ.பிரகாஷ், மாவட்ட திராவிட மாணவர் கழக துணைத் தலை வர் ஏ.விடுதலைஅரசி, தஞ்சை மாநகர இளைஞரணி துணைத் தலைவர் க.அ.பெரியார் செல் வன், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவர் இர.ஜெ. நிலவன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர், அவ சர காலத்தில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் குருதிக் கொடை வழங்கினர்.

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மேனாள் முதல் வர், அம்புஜம், ராமசாமி, செல் வமணி, கவுதமன், வேல்முருகன், மருதுதுரை, முகமது இத்ரிஸ் மற்றும் மருந்தாளுநர் கண்ணன் ஆகியோர் குருதிக் கொடை வழங்கும் முகாம் நடைபெற பெரும் உதவி புரிந்தனர்.

மாநில கிராம பிரச்சார அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மாநில பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவு தலைவர் மா.அழகிரி சாமி, மாநில கலைத்துறை செயலாளர் தெற்கு நத்தம் ச.சித்தார்த்தன், காங்கிரஸ் கட்சி மாநகர மாவட்ட தலைவர் பி.ஜி.இராஜேந்திரன், காப்பாளர் மு.அய்யனார், மாவட்ட துணை செயலாளர் அ.உத்திராபதி, தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப் பட்டு அ.இராமலிங்கம், தஞ்சை மாநகர தலைவர் பா. நரேந்திரன், மாநகர செய லாளர் கரந்தை அ.டேவிட், மாவட்ட ப.க.தலைவர் சா.அழகிரி, மாவட்ட ப.க. செய லாளர் பாவலர் பொன்னரசு, மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ச.சந்துரு, மாவட்ட தொழிலாளர் அணி செயலா ளர் ஆட்டோ ஏகாம்பரம், இபி காலனி பகுதி தலைவர் துரை.சூரியமூர்த்தி, இபி காலனி பகுதி செயலாளர் வெ. இரவிக்குமார், கீழவாசல் பகுதி தலைவர் பரமசிவம் கீழவாசல் பகுதி செயலாளர் பழக்கடை கணேசன், புதிய பேருந்து நிலையம் பகுதி தலைவர் சாமி.கலைச்செல்வன், புதிய பேருந்து நிலையம் பகுதி செயலாளர் கி.சவுந்தர்ராஜன், மருத்துவக் கல்லூரி பகுதி தலைவர் கோவிந்த ராஜ், தஞ்சை தெற்கு ஒன்றிய துணைத் தலைவர் நா.வெங்க டேஷ், தஞ்சை ஒன்றிய இளை ஞரணி செயலாளர் அ. இர மேஷ், பெரியார் நகர் அன்பர சன், திருச்சி மூர்த்தி, மணல் மேல் குடி ஒன்றிய இளைஞரணி தலைவர் யோவான்குமார், மாவட்ட மகளிர் அணி பொறுப் பாளர்கள் அ.கலைச்செல்வி, ஏ.பாக்கியம், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ச.அஞ்சுகம், குடந்தை ராணி குருசாமி, மாணவர் கழகத் தோழர்கள் கோவை இரா.அன்புமதி, அறி வுச்சுடர், மு.கனிமொழி, காங் கிரஸ் கட்சி ஜேம்ஸ், வயலூர் ராமநாதன், ஆதித்தமிழர் பேரவை நாத்திகன், மற்றும் ஏராளமான பொதுமக்கள் அனைத்துக் கட்சி தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *