நாகை, நவ.25- பெரியார் பெருந் தொண்டர் நாகை மாவட்ட திராவிடர் கழக விவசாய அணி செயலாளர் அ.தங்கராசு அவர்க ளின் படத்திறப்பு மற்றும் நினை வேந்தல் நிகழ்வு 18.11.2023 அன்று காலை 11.30 மணியளவில் கீழ் வேளுர் ஒன்றியம் மேலஒதியத்தூர் அய்யா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு கீழ் வேளூர் ஒன்றிய துணை தலைவர் அ.அரங்கராசு தலைமை ஏற்க, நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலி யன் அவர்கள் படத்தினை திறந்து வைத்தார்.
நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஷ் குப்தா மாலை அணி வித்து இரங்கல் உரை நிகழ்த்தினார். மாவட்ட இணை செயலாளர் வெ.இராமலிங்கம், ஒன்றிய செயலா ளர் அ.பன்னீர்செல்வம், திமுக ஒன்றிய பொருளாளர் பாரதி மோகன், மாநில திராவிட மாணவர் கழக சட்டக் கல் லூரி அமைப் பாளர் மு.இளமாறன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர். நிகழ்வில் கழகத் தோழர்களும், உற் றார் உறவினர்களும், ஊர் கிராம வாசிகளும் அனைத்து கட்சி தோழர் களும் திரளாக பங்கேற்றனர்.