அலைபேசி செயலியில் மண் குறித்த விவரங்கள் பன்னாட்டு விருது பெற்ற வாடிப்பட்டி மாணவருக்கு முதலமைச்சர் பாராட்டு

1 Min Read

அறிவியல்

அலைபேசி செயலி மூலம் போட்டோ எடுக்கப் படும் மண்ணின் வகை, ஈரத்தன்மை, பயிருக்கான தண்ணீர் தேவை உள்ளிட்ட தரவுகளை விவசாயிகள் உடனே தெரிந்து கொள்ளும் தொழில் நுட்பத்தைக் கண்டறிந்து பன்னாட்டு விருது பெற்ற வாடிப் பட்டியைச் சேர்ந்த மாணவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.

மதுரை மாவட்டம் டி.வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெ.நிலவழகன். தோல் வியாபாரி. இவரது மனைவி முனைவர் பானுமதி கோவை அண்ணா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக உள்ளார். கோவை காந்தி புரத்தில் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இவர்களது மகன் என்.சுதர்சன்(19). கோவை கிணத்துக்கடவு சிறீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் பிடெக் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் பாடத்திட்டத்தில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

சுதர்சன் தலைமையில் 4 நாடுகளைச்சேர்ந்த 6 மாணவர்கள் யுனெஸ்கோ நடத்திய இந்தியா – ஆப்ரிக்கா பன்னாட்டு ஹேக்கத்தான் 2022 போட்டியில் பங்கேற்ற னர். நொய்டாவிலுள்ள கவுதம புத்தா பல்கலைக்கழகத்தில் நடந்த பன்னாட்டு போட்டியில் 21 நாடுகளைச் சேர்ந்த 603 மாணவர்கள் பங்கேற்றனர்.

மண்ணின் வகை, ஈரப்பதம் உள்ளிட்ட விவரங்களை மொபைல் போன் செயலி மூலம் எளிதாகக் கண்டறியும் பன்னாட்டு அளவிலான மென்பொருளை வடிவமைத்து என்.சுதர்சன் தலைமையிலான குழு ரூ.3 லட்சம் பணத்து டன் கூடிய விருதை வென்றது. குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரிடம் சுதர்சன் விருது பெற்றார். இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளின் உயர்கல்வி அமைச் சர்கள் விழாவில் பங்கேற்றனர்.

மாணவரின் திறமையை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிச.30ஆம் தேதி சுதர்சன் மற்றும் பெற் றோரை அழைத்துப் பாராட்டினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *