மலக்குழி மரணங்கள் இனி நடக்கக்கூடாது! “விட்னஸ்” திரைப்படம் புகட்டும் பாடம்!

Viduthalai
2 Min Read

திராவிடர் கழகம்

சென்னை, ஜன. 12- பெரியார் சுயமரி யாதை ஊடகத்துறையும் CCAG  அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த, ’விட்னஸ்’ திரைப்படக் கலந்துரையாடல் கூட்டத்தில் திரைப்பட இயக்குநர் தீபக், கதாசிரியர் முத்துவேல் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

“விட்னஸ்” திரைப்படம்!

சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில், 7-1-2023 சனிக்கிழமை அன்று பிற்பகல் 4 மணிக்கு ”விட் னஸ்” திரைப்படத்தை, தொலைக் காட்சி வாயிலாகப் பார்த்து, திரைப் பட கலைஞர்களுடன் கலந்துரை யாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. திட்டமிட்டபடியே, பெரியார் சுய மரியாதை ஊடகத்துறை சார்பில் மாலை 4 மணிக்கு “விட்னஸ்” திரைப்படத்தை தொலைக்காட் சியில் பார்ப்பதற்கான ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. 

மலக்குழி மரணங்கள் தடுக்கப்படுமா?

தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெற்றது. திரைப்படத்தின் இயக்குனர், கதையாசிரியர் ஆகி யோர் கலந்து கொண்டு, பார்வை யாளர்களுடனான கேள்விகளுக்கு பதில் அளித்தனர். ”விட்னஸ்” படம் மலக்குழி மரணங்கள் இனி நடக்க கூடாது என்று வலியுறுத்தும் படம் என்பதால், மலக்குழியில் இறங்கி வேலை செய்த மேனாள் ஊழியர் களும், துப்புரவு பணியாளர்கள் சங்கப் பொறுப்பாளர்களும் கலந்து ரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந் தனர். அவர்கள், ’தற்போதைக்கு மலக்குழியில் இறங்கி வேலை பார்க்கும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யவும், அவ்வப்போது நடக்கும் மலக்குழி மரணங்களை தடுத்து நிறுத்தவும், பணியாளர்களை கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு தாரை வார்க்காமல் தடுக்க வும் கோரிக்கை வைத்தனர். 

ஒருங்கிணைந்த பிரச்சாரம் தேவை!

பெருநகர சென்னை மாநகராட் சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடக்க இருக்கும் நகர சபை கூட்டங்களில் மலக்குழி மரணங்கள் பற்றிய கருத்தை தெரி விக்கவும், மக்களிடம் மலக் குழி மரணங்களை பற்றிய விழிப்பு ணர்வு ஏற்படுத்தவும் ஆலோசனை கள் முன்வைக்கப்பட்டது. கலந்துரை யாடல் கூட்டத்திற்கு உறுதுணை யாக இருந்த பெரியார் சுயமரியாதை ஊடகத் துறைக்கு, சிசிகிநி மற்றும் ”விட்னஸ்” படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் திராவிட மாண வர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், உடுமலை வடிவேல், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் தளபதி ராஜ், மாநில மாணவர் கழகத் துணை செயலா ளர் ச.அஜி தன், தருமபுரி மாவட்ட இளைஞ ரணி தலைவர் த.மு.யாழ் திலீபன், தருமபுரி மண்டல மாண வர் கழக செயலாளர் இ.சமரசம், புதுக் கோட்டை மாவட்ட மாணவர் கழக பொறுப்பாளர் அன்பரசன், மலக் குழியில் வேலை செய்த மேனாள் ஊழியர்கள், சங்கப் பிரதிநிதிகள், பார்வையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். படக் குழுவின ருக்கு பெரியார் சுயமரி யாதை ஊடகத்துறை சார்பில் புத்த கங்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட் டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *