ஆவடி, ஜன. 21- ஆவடி பட்டாபிராம் பள்ளியில் பெரியார் 1000 தேர்வில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசும், பாராட்டும் செய்யப் பட்டது.
2022 ஆகஸ்ட்டில் நடைபெற்றது. இத்தேர்வு, பள்ளிகளுக்கு விடுமுறை, தேர்வு, மழை என பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனதால் பெரியார் 1000 தேர்வு பரிசளிப்பு விழா, 19-01-2023 அன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டு, பட்டாபிராம், உழைப்பாளர் நகரில் உள்ள ஆவடி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தோழர் ஜானகிராமன் தலைமை யேற்று உரையாற்றினார். ஆவடி மாவட்ட இளைஞரணித் தலைவர் வெ. கார்வேந்தன் முன்னிலை வகித்து உரைநிகழ்த்த, கழகத்தோழர்கள், ஆவடி நகரச் செயலாளர் இ.தமிழ்மணி, பூவை பகுதித் தலைவர் தமிழ்ச்செல் வன், ஆவடி பகுதித் தலை வர் இரண்யன் (எ) அருள் தாஸ்,வஜ்ரவேலு, அரும் பாக்கம் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளித் தலைமை ஆசிரியர் மணிவண்ணன் தோழர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்ட அளவில் இரண்டாம் பரிசு பெற்ற இப்பள்ளி மாணவி யதார்த்தினிக்கு ரூ.3000- பரிசும், சான்றிதழும் அளிக்கப்பட்டது. மாவட்ட சார்பில் பள்ளிக்கு சட்டகமிட்ட பெரியார் படம் நினைவுச்சின்னமாக வழங்கப் பட்டது.
மாவட்டத் துணைத் தலைவர் இரா. வேல் முருகன் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்து சிறப்பித்தார்.