21.1.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
இந்த ஆண்டு நடைபெற உள்ள எட்டு மா நில தேர்தலின் முடிவுகள், 2024 பொதுத்தேர்தலுக்கான முடிவை நோக்கி நகர்த்தும் என்கிறது தலையங்க செய்தி.
அரசுத்துறையில் 30 லட்சம் நிரப்பப்படாத பதவிகள் உள்ளன. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என உறுதியளித்த பிரதமர் மோடி, தற்போது 71000 பேருக்கு வேலை என அறிவிப்பது ஏன்? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கேள்வி.
பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று (20.1.2023) விசாரணைக்கு வந்தபோது, பீகாரில் ஜாதி வாரிய கணக்கெடுப்பு நடத்துவது என்பது மாநில அரசின் கொள்கை சார்ந்த ஒன்றாகும் அதில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு எந்தவித உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
றீ நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ஆர்எஸ்எஸ் நிறுவனர் டாக்டர் ஹெக்டேவார் ஆகியோர் சுதந்திரத்திற்கு முன் ஒரு கட்டத்தில் சந்தித்ததாகவும், அந்த அமைப்பு பல ஆண்டுகளாக நேதாஜிக்கு இரங்கல் மரியாதை செலுத்தி வருவதாகவும் கூறி, அவரது பிறந்த நாளில் பேரணி நடத்திட ஆர்.எஸ்.எஸ். முடிவு.
தி டெலிகிராப்:
மல்யுத்த வீரர் விக்னேஷ் போகட் துன்புறுத்தல் விவகாரத்தில் 2021 அக்டோபரில் தனது குடும்பத்தினருடன் பிரதமரிடம் விவரித்ததாகப் பதிவு செய்த பின்பும், இன்று வரை பிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார்? என காங்கிரஸ் கேள்வி.
– குடந்தை கருணா