அகமதாபாத், ஜன.23 பசுவின் சாணத்தால் கட்டப்படும் வீடுகள் அணுக்கதிர் வீச்சு ஏற் பட்டால் கூட பாதிப்பு அடை யாது என்று குஜராத்தின் தபி மாவட்ட நீதிமன்ற நீதிபதி வழக்கு ஒன்றின் போது கருத்து தெரிவித்துள்ளார். பசுக்களை சட்ட விரோதமாக கடத்திய வழக்கில் குற்றம் சாட்டபட்ட நபருக்கு ஆயுள் தண்டனையை குஜராத்தில் உள்ள தபி மாவட்ட நீதி மன்றம் விதித்தது.
இந்த வழக்கில் தீர்ப்பை அளித்த போது நீதிபதி சில கருத்துக்களையும் கூறினார். அதில், பசுவதையை நிறுத் தினால் பூமியில் உள்ள அனைத்து பிரச்சினகளும் தீர்ந்து விடும். பசுவின் சாணத் தால் கட்டப்படும் வீடுகள் அணுக்கதிர் வீச்சு ஏற்பட்டால் கூட பாதிப்பு அடையாது. தீர்க்க முடியாத பல நோய் களுக்கு பசுவின் சிறுநீர் அரு மருந்தாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார். இந்த தகவலை லைவ் லா இணைய தளம் வெளியிட்டுள்ளது.
நீதிபதியின் இந்த கருத்து வியப்பை ஏற்படுத்தும் வகை யில் அமைந்தது. ஏனெனில், இதற்கான அறிவியல் பூர்வ சான்றுகள் எதுவும் கிடை யாது என்பது குறிப்பிடத் தக்கது. இதே போல் வடோ தரா மாவட்ட நீதிபதி குடும்ப நலப்பிரச்சினை தொடர்பான வழக்கில் மயில்கள் கண்ணீர் மூலமாக இனப்பெருக்கம் செய்கின்றன என்று வித்தியாச மான தகவலைக்கூறியிருந் தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.