சென்னை கிண்டி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கட்டுமானப் பணிகள் முதலமைச்சர் ஆய்வு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசு, தமிழ்நாடு

சென்னை, ஜன. 23- சென்னை கிண்டி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனையில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பணிகளை விரைவில் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று (22.1.2023) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

மேனாள் முதலமைச்சர் கலைஞரின் 97-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 2021 ஜூன் 3ஆம் தேதி, சென்னை கிண்டி கிங் நோய்த் தடுப்பு ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடியில் 1,000 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்து வமனை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், இந்த மருத்துவமனையில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று (22.1.2023) ஆய்வு செய்ததுடன், பணிகளை விரைவில் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில், பசுமைக் கட்டட கட்டமைப்பாக இதை உருவாக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, சென்னை மாநகராட்சி அடை யாறு மண்டலத்தில் ரூ.16.44 கோடியில், 3,047 மீட்டர் நீளத்துக்கு மேற்கொள்ளப்படும் மழை நீர் வடிகால் பணிகளை முதல மைச்சர் ஆய்வு செய்தார். இதில், அய்ந்து பர்லாங் சாலை, பிள்ளையார் கோயில் தெரு, செங்கேணி அம்மன் கோயில் தெரு ஆகிய 3 சாலைகளிலும் பணிகள் முடிந் துள்ளன.

சிட்டி லிங்க் சாலை, நேதாஜி சாலையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. வேளச்சேரி முதன்மைச் சாலையில் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த 6 சாலைகளில் 2,398 மீட்டர் நீளத்துக்கு மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளன. நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறு முதலமைச்சர் அறிவு றுத்தினார்.

சாலைப் பணிகள்

இதேபோல, ஆலந்தூர் மண்ட லம், ஆற்காடு சாலையில் ரூ.27.40 லட்சம் மதிப்பில், 475 மீட்டர் நீளம், 7 மீட்டர் அகலத்தில் நடை பெறும் தார்ச் சாலைப் பணியையும் முதலமைச்சர் ஆய்வு செய்தார்.

“மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையில், சாலைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

உரிய தரக் கட்டுப்பாடு வழிமுறைகளைப் பின்பற்றி, சாலையை அமைக்க வேண்டும். 

அலுவலர்கள் அவ்வப் போது பணியை ஆய்வு செய்து, சாலையின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்” என்றும் முதலமைச்சர் அறிவுறுத் தினார்.

ஆய்வின்போது, அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிர மணியன், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உடனிருந்தனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *