மும்பை, ஜன. 24- ஆளுநர் பொறுப்பில் இருந்து தம்மை விடுவிக்கக் கோரி மகாராட்டிரா ஆளுநர் பகத்சிங் கோசியாரி பிரதமரிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 19ஆம் தேதி மும்பை வந்த போது பிரதமர் மோடியிடம் மகாராட்டிரா ஆளுநராக இருக் கக் கூடிய பகத்சிங் கோசியாரி இந்த விருப்பத்தை தெரிவித்துள் ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித் துள்ளது. மராட்டிய ஆளுநரான பகத்சிங் கோசியாரி மராட்டிய மன்னர் சிவாஜி குறித்து அவதூ றாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கடந்த நவம்பர் மாதம் புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் உண்டானது. இந்நி லையில் மகாராட்டிரா மாநில ஆளுநர் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறு அவர் பிரதமரிடம் வலியுறுத்தியதாக அம்மாநில ஆளுநர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் ஆளுநர் மாளிகை யில் ஒரு பகுதியாக கருதப்படும் இடத்தில் மகாராட்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர பட்ன வீஸ் மனைவியும் ஒரு சமூகவலை தளப் பிரபலமும் இணைந்து டான்ஸ் ஆடியது தொடர்பான காட்சிப் பதிவு பரவியது. ஆளுநர் மாளிகை என்பது மிகவும் முக்கியமான அரசியல் நிகழ்வுகள் இடம்பெறும் இடம் ஆகும்.
அங்கு தனிப்பட்ட இருநபர்கள் சமூகவலை தளத்தில் பிரபலமாக வத்தற்காக ஆபாசமாக ஆட்டம் போட்டதற்கு கடுமையான கண்ட னத்தை எதிர்கட்சிகள் எழுப்பினர், மேலும் இந்த விவகாரத்தில் ஆளுநர் மாளிகையை பயன்படுத்த யார் அனுமதி அளித்தது என்று கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில் ஆளுநர் பதவி விலக முடிவு செய்துள்ளார்.