நாமக்கல்,ஜன.24- நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே, வெண்ணந்தூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், (வயது 55) கட்டட சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி வசந்தா, (வயது 45), நாச்சிபட்டியில் டெய்லர் கடை வைத்துள்ளார். இவர்களது மகன் மனோஜ், (வயது 21). சில மாதங்களுக்கு முன், சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன், (வயது 32), என்ற ஜோதிடரை, கிருஷ்ணன் சந்தித்தார். அவர், ‘மாந்த்ரீகம் செய்தால் குடும்பம் மேன்மைய டையும்’ எனக் கூறி, கிருஷ்ணன் வீட்டுக்கு வந்து, சில பூஜை களை செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, கிருஷ்ணன் குடும்பத்துடன் ராமச்சந்திரனுக்கு பழக்கம் ஏற்பட்டது.
இதைப் பயன்படுத்தி, ராமச்சந்திரன் அடிக்கடி வசந்தா விற்கு தொலைபேசி மூலம், பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதையறிந்த கிருஷ்ணன், ராமச்சந்திரனை கண்டித் ததோடு, சில வாரங்களுக்கு முன், வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர், ராமச்சந் திரனை எச்சரித்து அனுப்பினர்.கடந்த 21.1.2023 அன்று இரவு, ராமச்சந்திரன் மது போதையில், கிருஷ்ணன் வீட்டுக்கு சென்று, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை, கிருஷ் ணன், பேருந்து நிலையத்திற்கு அழைத்து சென்று உள்ளார்.
அப்போது, ராமச்சந்திரன் மறைத்து வைத்திருந்த கத்தி யால், கிருஷ்ணனின் வயிறு மற்றும் கை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தி, தப்பியோடினார். ஆபத்தான நிலையில் இருந்த கிருஷ்ணனை, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே கிருஷ்ணன் இறந்து விட்டார்.வெண்ணந்தூர் காவல்துறையினர், ராமச்சந்திரனை தேடி வருகின்றனர்