அந்த மாநாட்டில் சுத்தி சுத்தி மூன்றே விசயங்கள்தான் பேசுகிறார் பாண்டே, ஒன்று இங்குள்ள பார்ப்பனர்களை பார்த்து அவர்கள் உங்களை ஓட விட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்கிறார்..
சரி நிதானமாக பார்க்கலாம் உண்மையில் யார் யாரை ஓட விடுவது? அய்அய்டியில் யார் யாரை ஓட விடுகிறார்கள்? அய்அய்எம் போன்ற இந்தியாவின் அதி உயர் பல்கலைக்கழகங்களில் யார் யாரை ஓட விடுகிறார்கள்?
இந்தியாவினுடைய அத்தனை ஒன்றிய அமைச்சக அலுவலகங்களிலும் யார் யாரை ஓட விடுகிறார்கள்? அமைச்சர்களின் தனிச் செயலாளர்களாக இருப்பவர்கள் யார்? அய்ஏஎஸ் அய்பிஎஸ்களாக இருப்பவர்கள் யார்? உலகம் முழுவதும் இருக்கும் இந்திய தூதரகங்களில் இருப்பவர்கள் யார்? தேசிய வங்கிகளில் இயக்குநர்களாக இருப்பவர்கள் யார்? ஒன்றிய அரசு நிறுவனங்களில் இயக்குநர்களாக இருப்பவர்கள் யார்?
இன்றைக்கும் அய்.அய்.டி.யிலிருந்து உச்சநீதிமன்றம் வரைக்கும் நீ தான் இருக்க, எல்லா இடங்களிலும் நீதான் எங்களை ஓடவிடுற, சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும் இந்தியாவின் எல்லா அதிகார மய்யங்களிலும் இன்னமும் உட்கார்ந்து கொண்டு நீ தான் எங்களை ஓட விடுற..
அடுத்து பெரிய பெரிய குடும்பக்கதை எல்லாம் சொல்லி சனாதன தர்மத்தை கைவிட்டு விடாதீர்கள் என்று கெஞ்சுகிறார்!
எந்த சனாதன தர்மத்தில் கடல் தாண்ட சொல்லி இருக்கு – கோட்டு சூட்டு போட்டுட்டு அமெரிக்காவுக்கு போயி வேலை பார்க்க சொல்லி இருக்கு, உன் தேவ பாஷை சமஸ்கிருதத்தை விட்டுவிட்டு ஜெர்மனையும் பிரெஞ்சையும் படிக்கச் சொல்லி இருக்கு? டாக்டரும் கலெக்டரும் உன் குல தொழிலா?
வார்த்தைக்கு வார்த்தை ‘பிராமண’ பாரம்பரியத்தை கட்டி காக்கணும்னு சொல்ற – என்ன? பெண்களை மொட்டை பாப்பாத்தி ஆக்குவியா, குழந்தை திருமணம் செய்வியா? உடன்கட்டை ஏறச் சொல்வாயா? வேலைக் குப் போகக்கூடாது என்று சொல்லுவியா – உன் வீட்டுப் பெண்களே எதால் அடிப்பாங்க?
அடுத்து முடிக்கும்போது இன்னைக்கு நாம் அனுபவிக்கும் அத்தனை சொகுசும் நம் பெரியவாள் கொடுத்தது பெருமாள் கொடுத்ததுன்னு சொல்ற
ஏம்பா எந்தப் பெரியவா காரை கண்டுபிடிச்சார்? எந்த பெரியவா ஏசியை கண்டுபிடித்தார்? எலக்ட்ரிசிட்டி மிக்ஸி கிரைண்டர்? வாஷிங் மெஷின் கார் பிளைட் டிரெயின் நீ வச்சிருக்க போன் என்று இன்றைக்கு நீ அனுபவிக்கும் 99% சொகுசுப் பொருட்களும் ஏதோ ஒரு மாட்டுக் கறி உண்ணும் மிலேச்சர் கண்டுபிடிச்சது தான்!
உன் பாரம்பரியம் என்ன கண்டுபிடித்தது? தட்டு வடையும் மிளகு பொங்கலும்தான் கண்டுபிடிச்சது, மனித குல முன்னேற்றத்திற்கு உன் சனாதன பாரம்பரியம் என்னடா கண்டுபிடிச்சது?
சரி இதெல்லாம் இருக்கட்டும் தமிழ்நாட்டுப் பார்ப்பன சங்க மாநாட்டில் வந்து உன் பீகாரி பிராமண பெருமையை எடுத்து வைக்கிறியே என்ன கதை?
தமிழ் மொழிக்காக நின்ற தமிழ் பார்ப்பனர்களுக்கு வரலாறு இருக்கு தமிழில் தான் பெருமாளுக்கு நாலாயிரம் திவ்ய பிரபந்தம் இருக்கு பீகாரியில் இல்லை, சைவத் திருமுறைகள் தமிழில் தான் பாடியிருக்கான் உன்னைப் போன்ற பிகாரி பார்ப்பானா பாடியிருக்கான்?, ராமானுஜமும் தமிழே வேதம், திருஞானசம்பந்தமும் தமிழ் மண்ணின் மரபு, எத்தனை முரண்பாடு இருந் தாலும் தமிழ் பார்ப்பான் வேற பீகாரில் இருந்து பெங் காலியில் இருந்து ஒரியாவிலிருந்து தெலுங்கில் இருந்து கன்னடத்தில் இருந்து மராட்டியத்தில் இருந்து வந்து இன்றைக்கு இங்கு கோலோச்சும் உன்னைப் போன்ற வடகலை பார்ப்பான் வேற..
யானைக்கு கூட வடகலை நாமத்தை போட அனு மதிக்காதவன் தான் தென்கலை தமிழ் பார்ப்பான், தமிழ் பார்ப்பனர்களே பாண்டேக்களிடம் உசாரா இருங்கன்னு தான் சொல்லணும்.
– அன்பே செல்வா