இந்தியாவின் ரயில்வே துறை வேதனை – சாதனை

2 Min Read

ஆந்திராவில் 2 ரயில்கள் மோதல் 

14 பேர் சாவு – 40க்கு மேற்பட்டோர் படுகாயம்

அரசியல்

விசாகப்பட்டினம் ,அக் 30 ஒடிசாவில் கடந்த ஜுன் மாதம் 2 ஆம் தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. நாட்டையே உலுக்கிய இந்த ரயில் விபத்தில் 280 பேர் பலியாகினர். இந்தியாவில் நடைபெற்ற மிக மோசமான ரயில் விபத்துக்களில் ஒன்றாக ஒடிசாவின் பாலாசோர் ரயில் விபத்து அமைந் தது. ஒடிசா ரயில் விபத்து சம்பவம் ஏற்படுத்திய ரணமே மக்கள் மத்தியில் இன்னும் முழுமையாக அகலாத நிலையில், ஆந்திராவில் நேற்று ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ரயில் விபத்தில் 14 பேர் பலியாகியுள்ளனர்.  பலர் காயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

இந்த ரயில் விபத்து குறித்த விவரம் வருமாறு: விசாகப் பட்டினத்தில் இருந்து ராயகடா விற்கு சென்று கொண்டிருந்த பயணிகள்  ரயில் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது பலாசா எக்ஸ்பிரஸ் திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரயில் மீது மோதியதாக சொல்லப்படுகிறது. இந்த பயங்கர விபத்தில் பலாசா ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் ரயில் பெட்டிக்குள் இருந்த பயணிகள் அலறினர். ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான தில் 14 பேர் பலியானதாகவும் பலர் காயம் அடைந்து இருப்பதாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளியாகி யுள்ளது. ரயில்கள் விபத்துக்கு உள்ளான தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் பெட்டிகளின் இடிபாடுகளுக் குள் சிக்கிய பயணிகளை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

ரயில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் அதிர்ச்சி அடைந்த தாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் அலுவலகத் தின் சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டக பள்ளி ரயில் நிலையத்தில் நடை பெற்ற ரயில்கள் விபத்து குறித்து முதலமைச்சர் அதிர்ச்சி அடைவ தாக தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகளை முடுக்கி விடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள ஜெகன் மோகன் ரெட்டி, காயம் அடைந்தவர்களுக்கு விரைவாக சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட் டுள்ளார்” எனக் கூறப்பட்டுள்ளது.

ரயில் விபத்து பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது 

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி

சென்னை, அக்30  ஒடிசா நிகழ்வை தொடர்ந்து ஆந்திர ரயில் விபத்து ரயில்வே பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அடிக் கோடிட்டு காட்டுகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆந்திர மாநிலம் கண்டகப்பள்ளி அருகே ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து கேள்விப்பட்டு சோகமடைந்தேன். சமீபத்தில் ஒடிசா நிகழ்வை தொடர்ந்து நடந்த இந்த சோகம், ரெயில்வே பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென்று என்று தெரிவித்து உள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *