தேசிய வாக்காளர் நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற பாட்டுப் போட்டியில் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர் எஸ்.சஞ்சய் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார் தேசிய வாக்காளர் நாளையொட்டி 25.1.2023 அன்று அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட வருவாய் துறை அலுவலர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு ரூபாய் 1000 மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார் பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்களும் வெற்றி பெற்ற மாணவனைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.