மதுரை, ஜன. 26- தென் தமிழ் நாடு விமான நிலையங் களில் பாதுகாப்புப் பணிக்கு தமிழ் தெரிந்த ஒன்றிய பாதுகாப்புப் படை வீரர்களை நியமிக்கக் கோரிய வழக்கில் கூடுதல் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையைச் சேர்ந்த வழக்குரைஞர் தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தென் தமிழ்நாடு திருச்சி, மதுரை, தூத்துக் குடியில் விமான நிலை யங்கள் செயல்படுகின்றன. இந்த விமான நிலை யங்களில் பாதுகாப்புப் பணிக்கு வெளி மாநிலங் களை சேர்ந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் (சிஅய்எஸ் எப்) மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் நியமிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உள்ளூர் மொழி தெரிவதில்லை.
மேலும் விமான நிலை யங்களில் வைக்கப்படும் அறிவிப்பு பலகைகள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருப்பதால் விமானப் பயணிகள் பாது காப்புப் படையினரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டிய சூழல் உள் ளது. அதுபோன்ற நிலைகளில் பயணிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. சமீபத்தில் நடிகர் சித்தார்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் மதுரை விமான நிலையத்தில் ஹிந்தி மட்டுமே பேச தெரிந்த பாதுகாப்புப் படையினருக்கும் இடையே 30 நிமிடங்களுக்கு மேல் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுபோன்ற பிரச்சி னையை திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழியும் சந்தித்துள்ளார். இதனால் திருச்சி, மதுரை, தூத்துக் குடி விமான நிலையங்க ளில் தமிழில் அறிவிப்புப் பலகைகள் வைக்கவும், தமிழ் தெரிந்த பாதுகாப் புப் படையினரை நியமிக்கவும் உத்தரவிட வேண் டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதி பதிகள் டி.கிருஷ்ண குமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி கள், மனுதாரர் தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய உத்தர விட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.