அமெரிக்காவில் ஆற்றுநீரில் கலந்த நஞ்சு மீன்களை உண்பவர்களுக்கு பாதிப்பு

Viduthalai
1 Min Read

அமெரிக்காவில் நதியில் பிடித்த மீன் ஒன்றை உண்பது நச்சுத்தன்மை கொண்ட நீரை ஒரு மாதத்துக் குக் குடிப்பதற்குச் சமம் என்று ஆய்வுகள் கூறுகிறது

அமெரிக்காவில் இருக்கும் நதி அல்லது ஏரியில் பிடிக்கப்பட்ட ஒரு மீனின் உடலில் இருக்கும் ஒருவகை அழிக்கமுடியாத நச்சுப் பொருளின் அளவு கடைகளில் விற்பனை யாகும் மீன்களின் உடலில் உள்ளதைவிட 278 மடங்கு அதிகமானது என்று ஆய் வொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

PFAS (Poly Fluoro Alkyl Substances) என்றழைக்கப்படும் கண்ணுக்குத் தெரியாத ரசாயன நச்சுப்பொருள் 1940களில் உருவாக்கப்பட்டது. 

அந்த ரசாயனம் பானை, சட்டி முதலிய உணவுப் பாத்திரங்களில் உணவுப்பொருள் கள் ஒட்டாமல் இருக்க உருவாக்கப்பட்டது. 

ஆனால், அந்த வகை ரசாயனத்தை அழிக்கமுடியாததால் அது சுற்றுப்புறத்தில் நச்சுப்பொருளாகத் தேங்கியிருப்பதாக ஆய் வாளர்கள் கூறுகின்றனர். 

காற்று, மண், ஏரி, நதி, உணவு, குடிநீர், மனிதர்களின் உடல் எனப் பலவற்றில் PFASதேங்கியிருக்கலாம்.  2013க்கும் 2015க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆய்வாளர்கள் அமெரிக்காவிலுள்ள ஏரிகளிலிருந்தும் நதி களிலிருந்தும் 500க்கும் மேற்பட்ட மீன் மாதி ரிகளைச் சேகரித்து அவற்றை ஆராய்ந்தனர். 

கிட்டத்தட்ட 75 விழுக்காட்டு மீன்களின் உடலில் PFOS (PFAS ரசாயனத்தின் துணைரகம்) கண்டுபிடிக்கப்பட்டது. PFAS ரசாயனத்தின் ஆக ஆபத்தான துணைர கங்களில் PFOS ஒன்று. அந்த வகை மீன் களின் உடலில் இருக்கும் நச்சுப்பொருளின் அளவு ஒரு மாதத்துக்கு PFAS உள்ள தண் ணீரைக் குடிக்கும் அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் ஆய்வாளர்கள். 

PFAS  ரசாயனத்தால் மனிதர்களுக்குக் கடுமையான சுகாதாரக் கோளாறுகள் ஏற் படும் சாத்தியமுள்ளது. அந்த நச்சுப்பொரு ளால் கல்லீரல் பாதிப்பு, உயர் ரத்தக் கொழுப்பு, புற்றுநோய் முதலியவை மனித உடலில் உருவெடுக்கலாம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *