லக்னோ, ஜன. 26 ஹிந்துக்களின் ‘புனித நூல்’ என்று கூறப்படும் ‘ராம்சரித்மானஸ்’ குறித்து பீகாரைத் தொடர்ந்து உ.பி.யிலும் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நூலை அவமதித்ததாகக் கூறி சமாஜ்வாதி மூத்த தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமஸ்கிருத அறிஞரும், ராம பக்தருமான துளசிதாசரால் 15-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட் டது ‘ராம்சரித்மானஸ்’ அவதி மொழியில் கவிதை நடையில் எழுதப்பட்ட இந்த நூலை ஹிந்துக்கள் ‘புனித நூலா’க்கருதி தங்கள் பூஜை அறையில் வைத்து பூஜிக்கின்றனர். இந்நூல் குறித்து உ.பி. தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முக்கியத் தலைவரான சுவாமி பிரசாத் மவுரியா கூறும்போது, “மதம் எதுவாக இருப்பினும் அதை நான் மதிக்கிறேன். ஆனால் மதத்தின் பெயரில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவம திப்பதை ஏற்க முடியாது. இதனால் பல கோடி மக்கள் ‘ராம் சரித்மானஸை’ படிப்பதில்லை. ஏனெனில் அதில் துளசிதாசர் தனது சொந்த விருப்பத்திற்காக எழுதிய அனைத்தும் குப்பை களே.
இந்நூலில் அவர், பெண் களையும் ‘சூத்திரர்’களையும் விலங்குகளுடன் ஒப்பிட்டு, அவர்கள் மீது தாக்குதல் நடத் தவும் தூண்டுகிறார். ‘ராம்சரித் மானஸின்’ சில பக்கங்களுக்கு அல்லது முழு நூலுக்கும் ஒன்றிய அரசு தடை விதிக்க வேண்டும்” என்றார். மேனாள் முதலமைச்சர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் உ.பி. சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் மவுரியா பதவி வகித்து உள்ளார். 2021-இல் இவர் விலகி பாஜகவில் இணைந்து பகுஜன் சமாஜில் இருந்து அமைச்சரானார். 2022இ-ல் பதவி இறக்கப் பட்டார். இதையடுத்து பாஜகவி லிருந்து விலகி சமாஜ்வாதியில் இணைந்தார்.
இந்நிலையில், ராம்சரித்மானஸ் குறித்து மவுரியா கூறிய கருத்து சர்ச்சையாகி உ.பி.யில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மவு ரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக உள்ளிட்ட கட்சிகள் உ.பி. அரசை வலியு றுத்தி வருகின்றன.
‘ராம்சரித்மானஸ்’ குறித்து பீகாரில் கடந்த வாரம் சர்ச்சை கிளம்பியது. அங்கு நிதிஷ் தலைமையிலான அரசின் கல்வி அமைச் சரான சந்திரசேகர், ‘சமூகத்தினர் இடையே ‘ராம்சரித்மானஸ்’ பிளவைஏற்படுத்துகிறது’ என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மாநில பாஜக வினர் வலியுறுத்தி வருகின்றனர். மவுரியாவின் கருத்தை அயோத்தி மசூதிகளின் முத்த வல்லிகளும் கண்டித்துள்ளனர்.