பிஜேபி ஆட்சியின் மதவெறித்தனம்:

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

குடியரசுத் தலைவரின் மாளிகையில் உள்ள முகலாய தோட்டத்தின் பெயர் மாற்றமாம்

புதுடில்லி, ஜன.29 குடியரசுத் தலை வரின் அதிகாரபூர்வ இல்லமான ராட்டிரபதி பவனில் உள்ள ‘முகல்’ கார்டன் எனப்படும் முகலாயத் தோட்டத்திற்கு ‘அம்ரித் உத்யன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுதந்திரத் தின் அமிர்த கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் புதிய பெயர் சூட்டப் பட்டுள்ளது.

இதுகுறித்து குடியரசுத் தலைவரின் இணை செய்தித் தொடர்பாளர் நவிகா குப்தா கூறியது: “நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், அதன் அமிர்தகால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள மொகலாயர் தோட்டம் என அறியப்பட்டும் தோட்டத்திற்கு “அமிரித் உத்யன்” என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பெயர்சூட்டி உள்ளார்.

இந்தத் தோட்டம் பொதுமக்களின் பார்வைக்காக ஞாயிற்றுக்கிழமைகளிலும் திறந்திருக்கும். மேலும், இந்த முறை ஜன.31 முதல் மார்ச் 26 வரை இரண்டு மாதங்களுக்கு திறந்திருக்கும். இவை தவிர, மாற்றுத் திறனா ளிகள், விவசாயிகள், பெண்களுக்காக சில நாள்கள் பிரத்யோகமாக ஒதுக்கப்படும்” என்றார்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகையின் இணைய தளத்திலும் அம்ரித் உத்யன் பற்றி புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதில், ‘சுமார் 15 ஏக்கர் விரிந்து பரவியி ருக்கும் அம்ரித் உத்யன், அடிக்கடி குடிய ரசுத் தலைவர் மாளிகையின் உயிரோட் டமாக சித்தரிக்கப்படுகின்றது. அம்ரித் உத்யன் தோட்டம், ஜம்மு காஷ்மீரில் உள்ள முகலாயர் தோட்டம், தாஜ்மஹாலை சுற்றியுள்ள தோட்டங்கள், பெர்ஷியாவின் மினியேச்சர் ஓவியங்களின் தாக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *