சென்னை, ஜன. 29- இந்தோ-பிரெஞ்சு வர்த்தக மற்றும் தொழில்துறை சேம்பர் (மிதிசிசிமி) தனது முதல் நிலைத் தன்மை மாநாட்டை சென்னையில், பிரான்ஸ் தூதர் லிஸ் டால்போட் பாரே மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சுப்ரியா சாகு ஆகியோர் முன் னிலையில் தொடங் கியது.
இந்நிகழ்வில் 70க்கும் மேற்பட்ட உயர்மட்ட பிரெஞ்சு மற்றும் இந்திய நிறுவனங்களைச் சேர்ந்த வணிகத் தலை வர்கள் கலந்துகொண்ட நிலைத்தன்மை நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தலைமை அனுபவ அதிகாரி கள் மற்றும் வணிகத் தலைவர்கள் ஆகியோர் பங்கேற் றனர். இந்தோ-பிரெஞ்சு வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் 20 நம்பிக்கைக்குரிய நிலையான ஸ்டார்ட்-அப்களுக்கு இடையே ஒரு ஸ்டார்ட்-அப் போட்டியை நடத்தியது, அதில் டெல்லஸ் ஹாபிடேட் நிறுவனம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரஞ்சு தூதர் லிஸ் டால்போட் பாரே கூறுகையில்:- “சுற்றுச்சூழல் மாற்றம் ஒரு சவாலாக மட்டும் பார்க்கப்படாமல், தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளவும், புதிய புதுமையான சந்தைப் பிரிவுகளை வெல்வதற்கான மகத்தான வாய்ப்பாகவும் இருக்க வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள பிரெஞ்சு நிறுவனங்களுக்கு அதற்கான விருப்பமும் ஆர்வமும் உள்ளது. அவர்கள் இந்தியாவின் இந்த புதுமையான சூழலியல் மாற்றத்தில் பங்கேற்கிறார்கள் என்று கூறினார்.