சீனா – இந்தியா மோதல் தீவிரமா?

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, ஜன. 29- இந்தியா வும் சீனாவும் 3,500 கிமீ தூரத்துக்கு எல்லையை பகிர்கின்றன. இந்த எல்லை தொடர்பாக 1962ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கிடையே போர் ஏற்பட்டது. கடந்த அய்ம்பது ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை காராணமாக இரு நாடு களிடையே மோதல் தொடர்ந்து வருகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் லடாக் எல்லைப் பகுதி யில் இந்தியா மற்றும் சீன ராணுவ வீர்களுக்கு இடையே மோதல் ஏற் பட்டது. அப் போது சீன தரப்பில் 50-க்கும் மேற் பட்ட ராணுவ வீரர்கள் இறந்ததாக தகவல் வெளியானது. 20 இந்திய ராணுவ வீரர்கள் உயி ரிழந்தனர். இந்த நிகழ்வுக் குப் பிறகு இந்திய ராணு வம் லடாக் எல் லைப் பகுதியில் கூடுதல் கவனம் செலுத் தத் தொடங்கியது. அதே சமயம், சீன ராணு வம் இந்த எல்லைப் பகு தியில் தன்னை வலுப் படுத்த ராணுவக் கட்ட மைப்பை உருவாக்கத் தொடங்கியது.

இந்நிலையில், சீனா வின் இந்த ராணுவக் கட் டமைப்பால், இருநாடு களிடையில் மோதல் மேலும் தீவிரமடையும் என்று லடாக் காவல் துறை சமர்ப்பித்த ஆய் வறிக்கையில் தெரிவிக்கப் பட் டுள்ளது. ஜனவரி 20 -22 தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி முன்னி லையில் நடைபெற்ற காவல்துறை உயர்மட்டக் கூட்டத்தில், லடாக் காவல் துறை, எல் லைப் பாதுகாப்பு தொடர்பான ஆய்வ றிக்கையை சமர்ப் பித்தது. உள்ளூர் கள நில வரத்தையும், இதுவரையிலான இந் தியா – சீனா மோதல் நிகழ்வுகளையும் ஆய்வு செய்து லடாக் காவல் துறை இந்த அறிக் கையை உருவாக்கியது. லடாக் எல்லைப் பகுதி யில் சீனா ராணு வக் கட் டமைப்பை அமைத்து வருவ தால், இனி இப் பிராந்தியத்தில் இந்தியா -_ சீன ராணுவத்தினர் இடையே அடிக் கடி மோதல் ஏற்படும் என்று அந்த அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *