அரியலூர் மாவட்டம் இலுப்பையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பெரியர் 1000 வினா விடை போட்டித் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கேடயம், பதக்கம், சான்றிதழ் மற்றும் பெரியார் படத்தினையும் 74ஆவது குடியரசு தின விழா (26.01.2023) அன்று திராவிடர் கழக அரியலூர் ஒன்றிய செயலாளர் கோபாலகிருட்டிணன் வழங்கினார். உடன் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.