சத்தியம் என்பது ஒரு விஷயத்தில் எல்லோ ருக்கும் ஒன்று போலவேபடும் என்று நினைக்கக் கூடியதாய் இல்லை. நாம் சத்தியமென்று கருதுவது மற்றொருவன் அசத்தியமென்று கருத உரிமையுடையதேயாகும். அன்றியும் சத்தியம் என்று ஒரு மனிதனுக்குப் பட்டதெல்லாம் உண்மையானதும், நியாயமானதும் என்று கருதி விடவும் முடியாது.
(பெரியார் 99ஆவது
விடுதலை பிறந்த நாள் மலர், பக்.37)