10 ஆண்டில் 4,189 சதவிகிதம் அளவிற்கு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து அதிகரிப்பு!

1 Min Read
இந்தியா

புதுடில்லி, பிப். 5 – மக்களவைக்கு 2009 முதல் 2019 வரையில் தேர்வு செய்யப் பட்ட 71 உறுப்பினர்களின் சொத்துகள் சராசரியாக 286 சதவிகிதம் உயர்ந்துள் ளதாக ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம்  (Association for Democratic Reforms – ADR)  தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்க ளையும் ஆளும் பாஜக நாடா ளுமன்ற உறுப்பினர்கள் பிடித்துள் ளனர். இவர்களில் சொத்து மதிப்பு அதிகபட்சமாக 4 ஆயிரம் சதவீதம் வரை அதிகரித்துள்ளது. ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கமானது, தேர்தல் வேட்பு மனுவோடு தாக்கல் செய்யப்படும் பிரமாணப் பத்தி ரத்தில் குறிப்பிடப்பட்டு உள்ள தகவல்க ளின் அடிப்படையில் இந்த சொத்துப் பட்டியலைத் தயாரித்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதிண்டா தொகுதியின் சிரோமணி அகாலிதள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹர்சிம் ரத் கவுர் பாதலின் சொத்து மதிப்பு 2009-இல் ரூ. 60.31 கோடியாக இருந்தது, 2019-இல் ரூ.  217.99 கோடியாக (261 சதவிகி தம்) உயர்ந்துள்ளது.  மகாராட்டிரா மாநிலம் பாரமதி தொகுதி தேசியவாத காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப் பினர்கள் சுப்ரியா சதானந்த் சுலேவின் சொத்து மதிப்பு, 2009-இல் ரூ. 51.53 கோடியிலி ருந்து 2019-இல் ரூ. 140.88 கோடியாக (173 சதவிதம்) உயர்ந் துள்ளது. ஒடிசா மாநிலம் பூரி தொகுதி பிஜு ஜனதா தளம் நாடாளுமன்ற உறுப்பினரான பினாகி மிஸ்ராவின் சொத்து மதிப்பு 2009-இல் ரூ. 29.69 கோடியிலிருந்து 2019-இல் ரூ. 117.47 கோ டியாக (296 சதவிகிதம்) உயர்ந்துள்ளது. இவர்களோடு, சுயேட்சை நாடாளு மன்ற உறுப்பினர்கள் உட்பட 71 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பு 2009-இல் ரூ. 6.15 கோடியாக இருந்தது, 2019 வரையிலான காலக் கட்டத்தில் ரூ.17.59 கோடியாக (சராசரி யாக 286 சதவிகிதம்) அதிகரித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *