அதானி – மெகா மோசடி!

Viduthalai
2 Min Read
இந்தியா

அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறை கேட்டில் ஈடுபட்டுவருகிறது என்றும், அந்தக் குழு மத்துக்கு மிக அதிக அளவில் கடன் இருக்கிறது என்றும் அமெரிக் காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான  “ஹிண் டன்பர்க் வெளி யிட்ட ஆய் வறிக்கை அதிர்வலைகளை ஏற் படுத்தியுள்ளது.  இதனால் ஒட்டுமொத்தமாக, அதானி குழுமம் பங்குச் சந்தைகளில் இரண்டே நாளில்  ரூ.4.20 லட்சம் கோடியை இழந்த தோடு உலக பணக்காரர்கள் பட்டியலில் 3ஆவது இடத்தில் இருந்த கவுதம் (நாளுக்கு நாள் சரிந்து) அதானி 14ஆவது இடத்திற்குக் கீழே சரிந்தார். 

அதானி குழுமம் மோச மான பங்கு கையாளுதல், கணக்கு மோசடி ஆகியவற்றின் மூலமாக இந்திய மதிப்பில் 17.8 டிரில்லியன் (சுமார் 18  லட்சம் கோடி ரூபாய்) மோசடி செய் திருப்பதற்கான ஆதாரங்களை  அமெரிக்க நிறுவனம் திரட்டி யுள்ளது. அதானி குழுமத்தின் மேனாள் மூத்த  நிர்வாகிகள் உட்பட முக்கியமான நபர் களிடம் பேசியது,  மதிப்பாய்வு செய்யப்பட்ட  ஆயிரக்கணக் கான ஆவணங்கள், ஆறுக்கும் மேற்பட்ட நாடுகளில் நேரடி யாக மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள் வழியாக இந்த மெகா மோசடி தெரிய வந்துள்ளது. 

அதானி நிறுவனங்கள் கணிசமான கடனைப் பெற் றிருக்கின்றன. கடன்களுக்காக பங்கு களின் மதிப்பை உயர்த்தி அடகு வைத்துள்ள னர். அதானி குடும்ப உறுப்பினர்கள் மொரீஷியஸ்,  அய்க்கிய அரபு எமிரேட், கரீபியன் தீவுகள் போன்ற வரி மோசடிக்கு புகழ்பெற்ற நாடுகளில் போலி யான நிறுவனங்களை உரு வாக்க ஒத்துழைத் துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.    

கவுதம் அதானியின் இளைய சகோதரர் ராஜேஷ் அதானி  வைர வர்த்தக இறக் குமதி ஏற்றுமதி திட்டத்தில் முறைகேடு செய்துள்ள தாக வருவாய் புலனாய்வு இயக்கு நரகத்தால் குற்றம்சாட்டப் பட்டு இரண்டு முறை கைது செய்யப்பட்டவர்.  அதானியின் மைத்துனர் சமீர் வோரா, வைர வியாபார ஊழலின் தலைவன் என்பது பரவலாக அறியப்பட்டதுதான். பிரதமர் மோடி மற்றும் பாஜகவுக்கு நெருக்கமாக இருப்ப தன் மூலம் அதானி பலனடைந்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறிவரும்  குற்றச் சாட்டுகளுக்கு வலுசேர்க்கும் வகையில் ஹிண்டன்பர்க் அறிக்கை அமைந்துள்ளது.  

அதானி குழுமத்தின் மோச டியால் பங்கு முதலீட்டாளர் கள் மட்டுமல்லாமல்  அரசுக் குச்  சொந்தமான எல்அய்சி, எஸ்.பி.அய், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள் ளது. எல்அய்சி அதானி குழுமத்தில் ரூ.74 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. அதில் 24,000 கோடி ரூபாயை இரண்டு நாட்களில் இழந்துள்ளது. மோசடி உறுதியானால் இந்த நிறுவனங்களில் தனது வாழ் நாள் சேமிப்பை வைத்துள்ள கோடிக் கணக்கான இந்தியர் களின் எதிர்காலம் நாச மாகும். அதானி குழுமம் பெற்றுள்ள மொத்த கடனில் 40விழுக்காடு எஸ்.பி.அய் வங்கியில் பெறப் பட்டது என்பதால் மக்களின் சேமிப்பு பாதுகாக்கப் பட வேண்டும். `ஹிண்டன் பர்க் அறிக்கை குறித்து விசாரிப் பதாக இந்தியப் பங்கு பரிவர்த் தனை வாரியமான செபி அறிவித்துள்ளது. அரசும் தனது பங்கிற்கு நேர்மையாக விசா ரித்து உண்மை களை மக்க ளுக்குத் தெரிவிக்கவேண்டும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *