மண்ணச்சநல்லூர், பிப். 9- பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் நடத்திய பெரியார் 1000 வினா-விடைப் போட்டி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சனவரி 4, 5, 6, மற்றும் 9 ஆகிய தேதிகளில் இலால்குடி கழக மாவட்டம் மண்ணச்சநல்லூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி சா.அய் யம்பாளையம் அரசு மேல் நிலைப் பள்ளி, ராசாம்பாளையம் சரவண பவா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
முதல், இரண்டு, மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் ரொக்கப் பரிசு மற்றும் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும் வழங்கப்பட்டன. மேலும் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர் களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த உதவிய பள்ளி ஆசிரியர்கள், உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியர்கள் பயனாடை அணி வித்து சிறப்பிக்கப்பட்டனர்.
அனைத்துப் பள்ளிகளுக்கும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் படங்கள் வழங்கப்பட்டது,
அனைத்து நிகழ்வுகளிலும் திருச்சி மண்டலத் தலைவர் பா.ஆல்பர்ட், இலால்குடி மாவட்ட கழக செயலாளர் ஆ.அங்கமுத்து, மாவட்ட துணைத்தலைவர் மு.அட்டலிங்கம், மகளிரணித் தலைவர் பி.என்.ஆர்.அரங்கநாயகி, ஒன்றியத் தலை வர் கு,பொ,பெரியசாமி, மண்ணச்சநல்லூர் நகரச் செயலாளர் க.பாலச்சந்திரன், நகரத் தலைவர் மூ.முத்துசாமி, தோழர்கள் க.சிவசங் கரன், வடக்குபட்டி பெருமாள் பணி நிறைவு பெற்ற மின்வாரிய அலுவலர் ம.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் தந்தை பெரியார் அவர்கள் பெண்கள் முன் னேற்றம் மற்றும் சமுதாயத் திற்கு ஆற்றிய தொண்டினை விரிவாக எடுத் துரைத்து எதிர் காலத்தில் மாணவர்களும் அதுபோன்று சிறந்து விளங்க வேண்டும் என்று வலியுறுத்தி உரையாற்றினர்.