1987 ஆம் ஆண்டில் ஒரு நிகழ்வு – அப்பொழுது சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர் எம்.என்.சந்த்ருகர். உயர்நீதிமன்றத்தில் காலியாக இருந்த 4 இடங்களுக்கும் பார்ப்பனரையே நியமனம் செய்தார்; தமிழ்நாடு அரசு அதனை நிராகரித்தது.
இதுகுறித்து அன்றைய சட்ட அமைச்சர் பொன்னையன் செய்தியாளர்களிடம் (12.10.1987) கூறியதாவது:
”உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சிபாரிசு செய்திருந்த நான்கு பேரும் ஒரே ஜாதியினர் – உயர்ந்த ஜாதியினர்.
எனவே, தமிழ்நாடு அரசு நான்கு பேரையும் நிராகரித்துவிட்டது. இதுபற்றி மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் தமிழ்நாடு அரசு எழுதியுள்ள கடிதத்தில், ”தமிழ் மண்ணுக்கு என்று சில விசேஷ (Soil Psychology) மனநிலைகள் உண்டு. அந்த நோக்கத்தில் இந்த நீதிபதிகளுக்கான நான்கு பேரையும் நியமிக்க முடியாது” என்று தமிழ்நாடு அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது 52 நீதிபதிகள் உள்ளனர். அதில் பார்ப்பன நீதிபதிகள் 9 பேர் உள்ள நிலையில், மேலும் இரு பார்ப்பன நீதிபதிகள் என்றால், எத்தகைய கொடுமை – மாபெரும் சமூக அநீதி!
அதிலும் ஒரு நீதிபதி சங் பரிவாரின் ஊதுகுழலாக இருப்பது கண்ணுக்கு எதிரே பச்சையாகத் தெரிந்தும், அவரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நியமனம் செய்வதா?
இதனை எதிர்த்துதான் திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்! (11.2.2023)
ஆர்த்தெழுவீர், சமூகநீதியாளர்களே!