சென்னை, பிப்.12 சென்னையில் தமிழ்நாடு பத்திரிகை ஒளிப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்று வரும் ஒளிப்படக் கண்காட்சியை, தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு பார்வையிட்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் ஒளிப்பட கலைஞர்கள் இக்கட்டான சூழலில் எடுத்த ஒளிப்படங்கள் சமூகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. ஒளிப்பட கலைஞர்கள் எடுத்த ஒளிப்படத்தை இந்த கண்காட்சியில் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. ஒளிப்படங்களை பார்த்த பிறகு பல மலரும் நினைவுகள், என்னுடைய செய்தி குறித்த புகைப்படங்கள் நாளேடுகளில் வருமா என காத்திருந்த காலங்கள் உள்ளது. தற்போது நேரலையாக அடுத்த நொடியில் ஒளிபரப்பு அளவிற்கு பரிணாம வளர்ச்சி ஏற்பட்டுள்ளது எனவும் நெகிழ்ச்சி மகிழ கூறினார்.
நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் குறித்தான கேள்விக்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கு பிறகே தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் நடை பெறும் என பதிலளித்து விடைபெற்றார்.