சென்னை, பிப்.14 சென்னையில் நேற்று காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். வங்கி ஏடிஎம் கொள்ளையை தடுக்க, அருகில் உள்ள காவல் நிலையத் துடன் ஏடிஎம் அலாரத்தை இணைக்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுக்கு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு அறிவுறுத்தினார். திரு வண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் களை உடைத்து, பணத்தைக் கொள்ளை யடித்தவர்களைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந் நிலையில், மீண்டும் இதுபோன்ற கொள்ளை நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்பதில் காவல் துறையினர் உறுதியாக உள்ளனர். இதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகளுடன் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு ஆலோசனை நடத்தினார். காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட் டத்தில், 51 வங்கிகளின் பொது மேலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில், வங்கி அதிகாரி களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங் கிய காவல்துறை தலைமை இயக்குநர் அவற்றை உடனடி யாக செயல்படுத்துமாறு அறிவுறுத்தினார். வங்கி, ஏடிஎம் மய்யங்களில் உள்ள பணத்தைக் கண்காணிக்க, மறைமுக கேமராக்களை நிறுவ வேண்டும். முகத்தை அடையாளம் காண உதவும் மென்பொருள் அடங்கிய கேமராக்களை அனைத்து ஏடிஎம்களிலும் பொருத்த வேண்டும். ஏடிஎம்கள் உடைக் கப்படும்போது எச் சரிக்கை மணி வங்கியில் மட்டுமின்றி, அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒலிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். கொள்ளையர்களின் முகம் தெளிவாகத் தெரியும்வகையில், ஏடிஎம் மய்யங்களில் அதிநவீன கண்காணிப்புக் கேமராக்களை பொருத்த வேண்டும். மேலும், ரகசியக் கேமராக்களையும் பொருத்த வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குநர் கூறினார். இவற்றை உடனடியாக நடை முறைப்படுத்துவதாக வங்கி அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஏடிஎம் கொள்ளையை தடுக்க ஏடிஎம் மய்யத்தையும் காவல் நிலையத்தையும் இணைக்க அலாரம்!
Leave a Comment