கொல்கத்தா,பிப்.18- மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா ஒன்றிய பாஜக அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங் களில் மத்திய விசாரணை குழுக்களை அனுப்பும் ஒன்றிய அரசு, தங்கள் ஆட்சி நடக்கும் உத்தரப்பிரதேசத்தில், தாய் – மகள் தீக்குளித்து இறந்த சம்பவத்தில் விசாரணை நடத்த, ஏன் இன்னும் குழுக்களை அனுப்பவில்லை? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.