பழைய ஓய்வு ஊதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் ஊராட்சி செயலாளர்கள் மாநாட்டில் தீர்மானம்

1 Min Read
- Advertisement -

சென்னை, நவ. 16– தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் 45ஆம் அமைப்பு நாளை முன்னிட்டு முப்பெரும் விழா மற்றும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில அள விலான கோரிக்கை மாநாடு சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.சத் தியமூர்த்தி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 14.11.2026 அன்று நடைபெற்றது.

இதில், ‘தவெகவின் தேர்தல் வாக்குறுதிப்படி தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க வேண்டும். அவர்களுக்கு மாதாந்திர ஊதியம் கருவூலம் மூலம் வழங்கப்பட வேண்டும். தொகுப்பூதியம், அவுட்சோர்சிங்கில் பணியாற்றி வரும் அரசுத் துறைப் பணியாளர்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண் டும்’ என்பன உட்பட 14 தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், ‘பணியாளர் குரல்’ தலையங்கத்திரட்டு நூலை வெளியிட்டார். அவர் பேசும்போது, ‘‘அரசுப் பணியாளர்கள், வங்கி மற்றும் தொழில் நுட்ப பிரிவு ஊழியர்கள் பாட்டாளி வர்க்கத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற கருத்து தவறா னது. இவர்களும் பாட் டாளிகள்தான். உலகம் முழுவதும் கருத்தால், கரத்தால் உழைக்கும் மக்கள்தான் அந்தந்த நாடுகளை ஆள வேண்டும்’’ என்றார்.

சங்க மாநிலத் தலை வர் சத்தியமூர்த்தி பேசும்போது, “அரசுப் பணியாளர்கள், ஆசிரி யர்களை நசுக்கும் போக்கை தவெக அரசு கையாள்கிறது. தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத் துக்கான நிதியை முதல் பட்ஜெட்டிலேயே ரத்து செய்ததுடன், 18 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு மட்டுமே இத்திட்டம் என நிபந்தனை விதித்ததோடு பதவி உயர்வுக்கு சொத்துக் கணக்கு கேட்டது. மேலும், வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் தவெக அரசு அவுட் சோர்சிங் செய்கிறது” என்று குற்றம்சாட்டினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *