திருச்சி, நவ. 16- திருச்சி, பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மொழி வாழத்துடன் தொடங்கிய குழந்தைகள் நாள் விழா 14.11.2026 அன்று சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்விற்கு உயிரியல் முதுகலை ஆசிரியை ஜெ.எஸ்குலின் நான்சி வரவேற்புரை வழங்கினார். பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் குழந்தைகளாகவே மாறி நடனம், நாடகம், கவிதை மற்றும் பாடல் என பலவிதமான கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்திக் காட்டி மாணவியர்கள் அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினர். ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு மிகவும் உற்சாகமடைந்த னர். பள்ளியின் தலைமை யாசிரியர் மாணவிகளின் எதிர்காலம், பாதுகாப்பு, மாணவிகள் கல்வியின் முக்கியத்துவம், பெண்க ளுக்கு தற்காப்பு அவசியம் ஆகியவற்றை எடுத்துக்கூறி சிறப்பானதொரு உரை நிகழ்த்தினார்.
இறுதியாக பள்ளியின் உடற்கல்வி ஆசிரியைஅ.தாஜூனிஷாபீ நன்றி நவில நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்ச்சி முழுவதையும் உயிரியல் முதுகலை ஆசிரியர் ஜெ. எஸ்குலின் நான்சி தொகுத்து வழங் கினார்.
