கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று சொன்னால் கோபப்படும் பக்தர்களே! இதற்கு என்ன பதில்?

1 Min Read
- Advertisement -

தமிழ்நாடு – கருநாடக எல்லை யான தாளவாடியை அடுத்த கும்டாபுரம் பீரேஸ்வரர் கோயிலில் ஒருவர் மீது ஒருவர் சாணத்தை வீசும் பாரம்பரிய திருவிழா என்று ஏராளமான இளைஞா்கள் பங்கேற்று கடவுளை வழிபட்டனராம்.

ஈரோடு மாவட்டம், தாள வாடியை அடுத்த கும்டாபுரத்தில் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பீரேஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு அடுத்து வரும் 3-ஆம் நாளில் சாணியடி திருவிழா என்று நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான இந்த விழா கோயிலில் சிறப்பு பூஜைகளுடன்  11.11.2026 அன்று தொடங்கியது.  இதற்கென மாட்டுப்பட்டியில் உள்ள அனைத்து பசு சாணங்களும் சேகரிக்கப்பட்டு கோயிலுக்குப் பின்புறம் குவித்து வைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, விழா கமிட்டியினர் ஊர் எல்லையில் உள்ள குளத்தில் சிறப்பு பூஜைகள் செய்து கழுதைக்கு மாலை அணிவித்து மேள தாளத்துடன் பக்தர்கள் சூழ ஆரவாரத்துடன் விழா நடைபெறும் இடத்துக்கு அழைத்து வரப்பட்டன. அங்கு குவித்துவைக்கப்பட்டிருந்த சாணத்துக்கு ஊா்பெரியவா்கள் சிறப்பு பூஜைகள் செய்து விழாவை தொடங்கிவைத்தனா்.

இதையடுத்து, இளைஞா்கள் ஒருவர் மீது ஒருவர் சாணத்தை வீசியெறிந்து இந்தப் பாரம்பரிய விழாவைக் கொண்டாடினராம். இதில் சிறுவர், இளைஞர்கள், முதியோர்   என அனைவரும் பங்கேற்றனர். இந்த  விழாவில் பெண் களும் பங்கேற்று பக்தர்களை கை தட்டி உற்சாகப் படுத்தினராம். விழா நிறைவுக்குப் பின் பக்தர்கள் குளத்தில் நீராடிவிட்டு பீரேஸ்வரரை வழிபட்டனராம். பக்தா்கள் வீசியெறிந்த சாணத்தை கிராமமக்கள் தங்களது விவசாய நிலங்களில் உரமாக இடுவதால் விவசாயம் செழிக்கும் என்பது அவர்களது நம்பிக்கையாம்.

இந்தப் பாரம்பரிய விழாவில் மைசூரு, பெங்களூரு, தாவணிகரே, சாம்ராஜ் நகர், கொள் ளேகால் ஆகிய பகுதிகளில் இருந்து கருநாடக பக்தர்களும் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *