லஞ்ச, ஊழல் வழக்குகளை விரைவாக முடிக்க மாவட்ட கூடுதல் நீதிமன்றங்களை சிறப்பு நீதிமன்றங்களாக அறிவிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு வேண்டும்

1 Min Read
- Advertisement -

மதுரை, நவ.14  நிலுவையில் உள்ள லஞ்ச, ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க கூடுதல் மாவட்ட நீதிமன்றங்களை, சிறப்பு நீதிமன்றங்களாக அறிவிப்பது குறித்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த, குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளராக இருந்த சாகுல் ஹமீது, தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் 3 ஆண்டாக நடந்து வரும் தன் மீதான லஞ்ச வழக்கை விரைந்து முடிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில், மாநிலத்தில் உள்ள 2,423 ஊழல் வழக்குகளையும் கூடுதல் சுமையாக ஒப்படைத்தால், சட்டப்படி 2 ஆண்டுகளில் விசாரணையை முடிக்க வேண்டும் என்ற நோக்கம் சிதைந்துவிடும்.

ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 3இன் கீழ், கூடுதல் அமர்வு நீதிபதிகளையும், சிறப்பு நீதிபதிகளாக நியமிக்க இடமுள்ளது. எனவே தனிச் சிறப்பு நீதிமன்றங்கள் இல்லாத 30 மாவட்டங்களில் தேவைப்படும் இடங்களில் புதிய தனிச்  சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்தும், கூடுதல் அமர்வு நீதிமன்றங்களையும் சிறப்பு நீதிமன்றங்களாக அறிவிப்பது குறித்தும் தமிழ்நாடு அரசு, உயர்நீதிமன்றத்துடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *