விரல்களை இழந்த சிறைக் கைதிக்கு மாற்று உறுப்பு அமைக்கும் செலவை அரசே ஏற்கக் கோரி வழக்கு

2 Min Read

புதுடில்லி, பிப்.19- டில்லி உயர்நீதிமன்றத்தில் திகார் சிறை கைதி ஒருவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், சிறையில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்தபோது விரல்களை இழந்து படு காயமடைந்த ஆயுள் கைதி ஒருவர், மாற்று உறுப்பு அமைப்பதற்காக தனியார் மருத் துவமனையில் சிகிச்சை பெற மாநில அரசு செலவை ஏற்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு இருந்தது. அதற் கான வசதி உள்ளது என்றும் இழப்பீடு வழங்கவும் கோரப்பட்டு இருந்தது. 

இதுபற்றி டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுவர்ண காந்த சர்மா விசாரணை மேற் கொண்டு அளித்த தீர்ப்பில், குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நபரோ அல்லது ஒரு சுதந் திர குடிமகனோ வலி என்பது அவர்களுக்கு வேறுபட்டதல்ல. சிறைக் கைதிகள், விசாரணை கைதிகள் அல்லது குற்றவாளிகளை பற்றி பேசும் பலர், அவர்கள் இரக்கம் காட்டப்பட வேண்டாதவர்கள் என்ற அளவிலேயே பெருமளவில் பேசப்படுகிறது. பலரின் நோக்கமும் அந்த அளவிலேயே உள்ளது. ஆனால், குரலற்ற நபரின் குரலை நீதிமன்றம் கேட்க வேண்டும். ஒரு சிறை கைதியின் வலி என்றில்லாமல் மனிதர் என்ற அளவில் உணர்ந்து, பாதிக்கப்பட்ட நபருக்கு வலிக்கான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

இந்திய அரசமைப்பின்படி, உதவியற்ற, கைவிடப்பட்ட அல்லது ஆற்றல் சமநிலை யில் இல்லாத, ஆதரவற்ற நபராக இருக்கும் மக்களுக்கு அடைக்கலம் அளிக்க கூடிய வகையில், அவர்களுக்கு உற்ற துணையாக நீதிமன்றங்கள் நிற்க வேண்டும். நீதிமன்றம் தண்டனை வழங்கி விட்டது என்பதற்காக சமூகம் மற்றும் குடும்பத்தில் இருந்து பிரிக்கப்பட்ட சிறைக் கைதிகளை பொதுமக் களோ மற்றும் அவர்களது குடும்பத்தினரோ கூட கவனித்து, பார்ப்பதில்லை. சீர்திருத்த இல்லங்களாக உள்ள சிறையில், அதிகாரி களாக உள்ளவர்களே, கைதிகளின் பாதுகா வலர்களாக செயல்பட்டு, அவர்களது சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கும் பாதுகாவ லர்களாக இருக்க வேண்டிய தருணமிது என நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார். 

அடிப்படை உரிமைகள் என்பது காகிதத்தில் மட்டும் இருப்பதுடன் நில்லாமல், அவை வாழும் சட்டங்களாக மாறியுள்ளன என உறுதி செய்யப்படுவது நீதிமன்றங்களின் கடமை.

குடிமகன்களுக்கு உதவிடவும், வழி காட்டவும் வகையில் செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்து உள்ளார். அதனால் ஜனநாயகத்தில், சிறை கைதிகளின் இக் கட்டான சூழ்நிலையை கவனத்தில் கொண்டு அவர்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது மாநில அரசிடமே உள்ளது என நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *