அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, நவ.25 தமிழ்நாடு முழுவதும் இதுவரை 3,315 பேர் உடலுறுப்பு கொடை செய்ய பதிவு செய்துள்ளதாக மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார்.
சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நேற்று (24.11.2023) மூளைச்சாவு அடைந்து, உடல் உறுப்புகள் கொடை செய்த ராமாபுரத்தைச் சேர்ந்த பார்த்திபன் (32) என் பவரின் உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார். ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் கடந்த 11ஆம் தேதி விபத்தில் சிக்கி, தலையில் பலத்த காயங்களுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவ மனை யில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சி.டி.ஸ்கேன் எடுத்து பார்த்ததில் மூளையில் ரத்தக்கசிவு இருப்பது கண்ட றியப்பட்டு அதற்கான தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் 23.11.2023 அன்று அவர் மூளைச் சாவு அடைந் திருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். பார்த்திபனின் தாயார் மற்றும் அவரது உறவினர்களிடம் உடலுறுப்பு கொடை பற்றி சொன்னவுடன், பார்த்திபனின் தாயார் தனது மகன் உயிர் இப்போது பிரிந் திருந்தாலும், அவனது உடலு றுப்புகள் வேறு பலரின் மூலம் வாழ்வது எனக்கு நிறைவைத் தருகிறது என்று கூறி உடலு றுப்பு கொடைக்கு அனுமதித் திருக்கிறார்.
பார்த்திபனின் கல்லீரல், 2 சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் தோல் ஆகியவை பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகை யில், ‘‘கடந்த இரண்டு மாதங் களில் 30ஆவது மூளைச்சாவு அடைந்தவரிடமிருந்து உடலு றுப்புகள் கொடை பெறப் பட்டுள்ளது. இது இந்திய வரலாற்றில் அல்ல. உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய சாதனை. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 3,315 பேர் உடலுறுப்பு கொடை செய்வதற்கு பதிவு செய்திருக்கிறார்கள் உடலுறுப் புகளுக்காக காத்திருக்கிறார்கள்’’ என்றார்.