திருக்குறளை ஒப்புவித்து உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த வேலூர் சிறுவன்

1 Min Read
- Advertisement -

வேலூர், நவ.9- வேலூர் கொசப்பேட்டையைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவர் சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மேனகாதேவி. இவர்களுக்கு கனிஷ்கர் (6 வயது), லிதேஷ் (3 வயது) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

கனிஷ்கர் சென்னையில் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான். சிறுவனுக்கு திருக்குறள் மீது ஆர்வம் ஏற்பட்டதால் அதை மனப்பாடம் செய்யத் தொடங்கினான். தொடர்ந்து சிறுவன் 60 வினாடிகளில் 30 திருக்குறளை மிக துல்லியமாகவும், சரளமாகவும் ஒப்புவித்தான்.

இந்த சாதனை நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் என்ற உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இதற்காக சிறுவனுக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. மேலும் சிறுவன் திருக்குறள் மீது கொண்டுள்ள ஆர்வத்துக்கு உலக சாதனை அமைப்பு நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *