போராட்டமா? சுற்றுலாவா? உச்சநீதிமன்றத்தின் நேரக் கட்டுப்பாடு ஏன்?

- Advertisement -

டில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினா் நடத்திய தீவிரப் போராட்டங்களைத் தொடா்ந்து, அங்கு போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டிருந்த இடங்களில் இருந்து ஜந்தர் மந்தரை காவல் துறை நீக்கியது. இதற்குப் பதிலாக தலைநகரில் ராம்லீலா மைதானம், புராரி மைதானம், சிபிடி மைதானம் ஆகியவற்றில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில், ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்துவதற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் வணிகர் அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது உச்சநீதிமன்றத்  நீதிபதிகள் அமர்வு கூறியதாவது: அரசமைப்புச் சட்டத்தின் 19(1)(ஏ), (பி) பிரிவுகளின் கீழ், போராடுவது என்பது அடிப்படை உரிமை. அதேவேளையில் வியாபாரம், தொழில் செய்வதற்கான உரிமை உள்ளிட்ட பிற உரிமைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். ராம்லீலா மைதானம் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டக் களமாக இருந்தாலும், அதை கால வரம்பின்றி ஆக்கிரமித்திருக்க முடியாது. அனைவருக்கும் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. ஆனால், அதற்கு குறிப்பிட்ட நேரமும், கால அவகாசமும் ஒதுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தது.

“போராட்டம் என்பதே பறிக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுப்பதற்கான முதன்மை ஆயுதம். அதை நேரம், காலம் பார்த்து, கட்டுப்பாடுகளுக்குள் அடைத்துச் செய்ய வேண்டும் என்றால், அது போராட்டமே அல்ல; பிக்னிக் ஸ்பாட்டிற்கு உல்லாசப் பயணம் செல்வது போன்ற ஒரு நிகழ்வாகவே மாறிவிடும்” என்னும் குரல் தற்பொழுது சமூக தளங்களிலும் சாமானிய மக்கள் மத்தியிலும் வலுவாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

வணிகர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் எனப் பலதரப்பட்ட மக்களும் தங்களின் வாழ்வாதார உரிமைகளைப் பெறப் போராட்டங்களை நம்பியே இருக்க வேண்டிய சூழல் உள்ளது. இத்தகைய சூழலில், ‘காலவரையின்றி போராட்டங்களை நடத்தக் கூடாது’ என்றும் ‘பொது மக்களுக்கு இடையூறு இல்லாதவாறு குறிப்பிட்ட நேரத்திலும் இடத்திலும் மட்டுமே போராட வேண்டும்’ என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துகள், மக்களின் போராட்ட வலிமையையும் எதிர்ப்புக் குரலையும் ஒடுக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

டில்லி விவசாயிகள் போராட்டம் தரும் வரலாற்றுப் பாடம்

இதற்கு மிகச்சிறந்த சான்றாக 2020-2021 காலகட்டத்தில் நடைபெற்ற டில்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டம் சுட்டிக் காட்டப்படுகிறது. சுமார் ஓர் ஆண்டிற்கும் மேலாகத் தட்பவெப்ப நிலையைப் பொருட்படுத்தாமல், நெடுஞ்சாலைகளை முடக்கி விவசாயிகள் நடத்திய கால வரையற்ற உறுதியான போராட்டத்தின் விளைவாகவே, அவர்களின் வாழ் வாதாரத்தைப் பறிக்க வந்த மூன்று வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது.

அன்று விவசாயிகள் அரசாங்கம் ஒதுக்கிய ஒரு குறிப்பிட்ட இடத்திலோ அல்லது நேரம், காலம் பார்த்தோ, சில மணி நேரங்கள் மட்டும் போராடி விட்டு கலைந்து சென்றி ருந்தால், அந்தச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டிருக்குமா? விவசாயிகளின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட்டிருக்குமா? என்பது இன்றியமையாத கேள்வியாக உருவெடுத்துள்ளது.

உரிமைக்கான போராட்டமா?
அனுமதி பெற்ற நிகழ்வா?

அமைதியான வழியில் போராடுவது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை. அதிகாரத்தில் இருப்பவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும், நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும் அழுத்தத்தைக் கொடுப்பதே போராட்டத்தின் முக்கிய நோக்கம்.

நேரக் கட்டுப்பாடுகளுடனும், அதிகார வர்க்கத்தின் நிபந்தனைகளுடனும் நடத்தப்படும் போராட்டங்கள், அதன் உண்மையான நோக்கத்தையும் வீரியத்தையும் இழந்து வெறும் சடங்காக மட்டுமே எஞ்சும் என்பதில் சந்தேகமில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *