குடியரசுக் கட்சியின் இந்த வரலாற்றுத் தோல்விக்குப் பின்னால் இருந்த முக்கியக் காரணங்கள் இதோ:

- Advertisement -
  1. விண்ணைமுட்டும் விலைவாசியும், பணவீக்கமும்!

அமெரிக்கா முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாக்காளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. செப்டம்பர் வரையிலான ஓராண்டில் அமெரிக்காவில் விலைவாசி 3.7 சதவீதம் உயர்ந்துள்ளது. எரிபொருள் மற்றும் எரிசக்தி விலைகள் அதிகரித்ததே இதற்கு முக்கியக் காரணம், அரசாங்க தரவுகளின்படி, செப்டம்பரில் ஒரு கேலன் டீசலின் சராசரி சில்லறை விலை 6.52 டாலராக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. கடந்த ஓராண்டில் பணவீக்கம் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாக 79 சதவீதம் வாக்காளர்கள் கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர். மேலும், வழக்கத்தைவிட விலைவாசி உயர்ந்ததற்கு அதிபர் டிரம்பின் கொள்கைகளே காரணம் என்று 10இல் 6 பேர் குற்றம் சாட்டியுள்ளனர்.

  1. மக்களிடம் செல்வாக்கிழந்த ஈரான் போர்

விலைவாசி உயர்வுக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக ஈரான் உடனான போர் அமைந்தது. பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது போரைத் தொடங்கின. இதனால் உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமான ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதன் விளைவாக எரிபொருள் விலைகள் வேகமாக உயர்ந்தன. ‘முதலில் அமெரிக்கா’ (America First) என்ற தேர்தல் வாக்குறுதியைக் கொடுத்து ஆட்சிக்கு வந்த டிரம்பின் இந்த நடவடிக்கை அவரது ஆதரவாளர்களுக்கே ஏமாற்றத்தை அளித்தது. அமெரிக்கா ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தது தவறான முடிவு என்று 63 சதவீதம் வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  1. ஜனநாயகக் கட்சியினரின் தெளிவான தேர்தல் பிரச்சாரம்

ஜனநாயகக் கட்சியினர் இவ்வளவு பரவலான வெற்றியைப் பெறுவதற்கு வலுவான வேட்பாளர்களும், அவர்களின் மக்கள் நலன் சார்ந்த பிரச்சாரமுமே முக்கியக் காரணமாக இருந்தன. விலைவாசி உயர்வு, சுகாதார சேவைகளைப் பெறுவதிலுள்ள சிக்கல்கள் ஆகியவற்றை மய்யமாகக் கொண்டு அவர்கள் தங்களது பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். ஜேம்ஸ் தலாரிகோ, ஆடம் ஹாமில்டன், அன்னி ஆண்ட்ரூஸ், அப்துல் எல்-சயீத் மற்றும் ஜான் ஒசாஃப் போன்ற வேட்பாளர்கள் மக்களின் உண்மையானப் பிரச்சினைகளைப் பேசி வாக்காளர்களின் மனங்களை வென்றனர்.

  1. டிரம்பின் செல்வாக்கு சரிவு

வாக்காளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்திய முக்கியமான இரண்டு விவகாரங்களான விலைவாசி உயர்வும், ஈரான் போரும் டிரம்புடன் நேரடியாகத் தொடர்புடையவை. குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் மத்தியிலேயே டிரம்புக்கான ஆதரவு குறைந்திருந்தது. தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மக்களின் உண்மையானப் பிரச்சினைகளைப் பேசாமல், சர்ச்சைக்குரிய புனரமைப்புப் பணிகள் போன்ற அவசியமற்ற விஷயங்கள் குறித்து டிரம்ப் நீண்ட நேரம் பேசியது வாக்காளர்களிடையே அதிருப்தியை மேலும் அதிகரித்தது.

  1. ஹிஸ்பானிக், கறுப்பின வாக்காளர்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஹிஸ்பானிக் மற்றும் கறுப்பின வாக்காளர்களில் ஒரு பகுதியினர் குடியரசுக் கட்சியை நோக்கி நகர்ந்தது டிரம்பின் வெற்றிக்கு உதவியது. ஆனால், இந்த இடைக்காலத் தேர்தலில் அந்தப் போக்கு முற்றிலுமாக மாறியுள்ளது. டெக்சாஸ் – மெக்சிகோ எல்லையை ஒட்டிய ஹிஸ்பானிக் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதிகளிலும், கறுப்பின மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாவட்டங்களிலும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கான ஆதரவு கணிசமாக அதிகரித்துள்ளது. குடியேற்ற அமலாக்க நடவடிக்கைகள் மீதான பரவலான அதிருப்தியும் இதற்கு ஒரு முக்கியக் காரணமாகும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *