மதுக்கரை, பிப். 21- கோவை மதுக்கரை ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட் டம் கடந்த 19.02.2023 அன்று காலை 11 மணி யளவில் வெள்ளலூர் தந்தை பெரியார் பகுத்த றிவு படிப்பகத்தில் மாவட்ட துணைச் செயலாளர் தி.க காளிமுத்து தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் தி.க செந்தில் நாதன், மண்டல செயலாளர் ச.சிற்றரசு ஆகியோர் முன் னிலை வகித்தனர் மாநில இளைஞரணி அமைப்பா ளர் ஆ.பிரபாகரன் கழக காப்பாளர் ம.சந்திர சேகர், மதுக்கரை ஒன்றிய தலைவர் எட்டிமடை மருதமுத்து, வெள்ளலூர் நகர தலைவர் தி.க.ஆறுச் சாமி, மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் கா. கவுதம்,ம.எழிலன் ஆகி யோர் பங்கேற்று கருத்துக் களை பகிர்ந்து கொண்டார்
தீர்மானம் 1:
கு.வெ.கி ஆசான் அவர் களின் துணைவியார் பேராசிரியர் சாரதாமணி அம்மையார் அவர்களின் மறைவிற்கு இக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றது.
தீர்மானம் 2:
வெள்ளலூர், மதுக் கரை மார்க்கெட், திரு மலையாம் பாளையம் பகுதிகளில் மார்ச் மாதத் தில் தெருமுனை கூட் டங்கள் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.