மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுவது என்பது, தனி மனிதருக்கான பாராட்டு அல்ல – திராவிடத் தத்துவத்தின் சாதனைக்கான பாராட்டு!

2 Min Read
- Advertisement -

காலத்தை வெல்லும் ‘பெரியார் அறிவுலகம்’ எனும் நூலகத்தைக் கண்டு மகிழ வாருங்கள், ஓடிவாருங்கள்!
திராவிட நாயகர் தளபதி மு.க.ஸ்டாலினும், நானும் பங்கேற்கிறோம்!

மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுவது என்பது, தனி மனிதருக்கான பாராட்டு அல்ல  – திராவிடத் தத்துவத்தின் சாதனைக்கான பாராட்டு! காலத்தை வெல்லும் ‘பெரியார் அறிவுலகம்’ எனும் நூலகத்தைக் கண்டு மகிழ வாருங்கள், ஓடிவாருங்கள்! திராவிட நாயகர் தளபதி மு.க.ஸ்டாலினும், நானும் பங்கேற்கிறோம்!  நவம்பர் 4 – கோவை வரலாறு படைக்கட்டும்! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பாசத்திற்குரிய கொள்கை உறவுகளே,

கருஞ்சட்டைக் கடமை வீரர், வீராங்கனைகளே!

கட்டுப்பாட்டுக்கு எடுத்துக்காட்டான இளைஞர் சிங்கங்களே!

சந்திப்போமா, சந்திப்போமா!

அறிவு ஆசான்
பகுத்தறிவுப் பகலவன் பெயரால்
!

கோவையில் (அக்.4) புதன்கிழமை காலை புத்துணர்வுப் பூத்துக் குலுங்கும் காட்சியை நமது இயக்கம் படைத்திட உள்ளது. ‘திராவிட மாடல்’ ஆட்சி நடத்திய, திக்கெட்டும் திராவிடப் பண்பாட்டை நிலை நிறுத்திய, ‘திராவிட நாயகர்’ தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவு ஆசான் பகுத்தறிவுப் பகலவன் பெயரால், ‘பெரியார் அறிவுலகம்’ என்ற புதியதோர் அறிவுச்சோலையை 300 கோடி ரூபாய் செலவில் அமைத்து, ‘இனிவரும் உலக’த்துக்கு அய்யா வழிகாட்டியதைப்போல, வருங்காலத் தலை முறைகளுக்கு வழிகாட்டி, விழி திறக்கும் வகையில் செய்த சீர்மிகு சிறப்பு நூலகத்தினை  கோவையில் அமைத்துள்ளார்.

அதனை  இன்றைய ஆட்சியின் முதலமைச்சர்  கடந்த அக்டோபர் 16 அன்று திறந்து வைத்தார் என்றாலும், ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர்தான் இந்தத் திட்டத்தை அறிவித்து, நிதி ஒதுக்கிச் செயல்பட வைத்தவர். இடையில் தேர்தல் அறிவிப்புக் குறுக்கீடுகளால் திறப்பு விழா தள்ளிப் போனது.

உருவாக்கியவருக்கு, உள்ளம் வழிய நன்றி – பாராட்டினை வழங்குவது நமது இயக்க அடையாளப் பண்பல்லவா?

எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறோம்!

அதனால், கோவையில் நன்றி – பாராட்டுத் திருவிழாவும், தந்தையின் 148 ஆம் பிறந்த நாள் பெருவிழாவும் மிகச் சிறப்பான வகையில் கழகச் செயல்வீரர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு வருவது அறிந்து எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

வ.உ.சி. மைதானத்தில் கருஞ்சட்டைக் கடல் பொங்கிக் காணப்படவேண்டும்.

இயக்கக் கொள்கைத் துறவிகளான பாசறை வீரர்களுக்கு மறைமலைநகரில் சென்ற ஆண்டு ‘சல்யூட்’ தந்த திராவிட நாயகருக்கு நாம் நன்றி பாராட்டி, கோவை பெரியார் அறிவுலகத் திருப்பணிக்கு – அகிலம் வியக்கும் அத்திட்டத்திற்கு – நமது நன்றியை, பாராட்டுப் பெருமழையைப் பொழியச் செய்யவேண்டாமா?

நமது கடமை – எனக்கு மருந்து, மாமருந்து!

ஒரு மாத இடைவெளிக்கிடையே உங்களைச் சந்திப்பதும், இதுபோல வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாராட்டுவதும் நமக்குக் கடமை – எனக்கு மருந்து, மாமருந்து!

எனவே, திரண்டு வாருங்கள், குடும்பம் குடும்பமாக வாருங்கள்!

தனது சாதனைச் சேய்தனை உச்சிமோந்து மெச்சிக் கொண்டாடுவதைவிட தாய்க்கு, தாய்க்கழகத்துக்கு ஏது வேறு பெருமை?

காலத்தை வெல்லும் பெரியார் அறிவுலகம்!

மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுவது என்பது, தனி மனிதருக்கான பாராட்டு அல்ல  – ஒரு தத்துவத்தின் சாதனைக்கான பாராட்டு!

காலத்தை வெல்லும் ‘பெரியார் அறிவுலகம்’ – கண்டு மகிழ வாருங்கள், ஓடிவாருங்கள்!

நவம்பர் 4 – கோவை வரலாறு படைக்கட்டும்!

 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை         

2.11.2026 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *