தூத்துக்குடி, நவ. 2- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஒன்றிய கழகக் கூட்டம் 1.11.2025 அன்று மாலை 4 மணிக்கு தோப்பூர் சேகுவேரா இல்லத்தில் நடைபெற்றது. மாவட்டக் கழகத் தலைவர் மு.முனியசாமி தலைமையேற்க, பெரியார் மய்யக் காப்பாளர் பொ.போஸ், கி.கோபால்சாமி முன்னிலையில் கலந்துரையாடல் தொடங்கியது. ஒன்றியத் தலைவர் து.கவுசிக் அனைவரையும் வரவேற்றார். மாவட்டக் காப்பாளர் மா.பால்ராசேந்திரம் தோழர்கள் ஆற்ற வேண்டிய களப்பணி பற்றியும், தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் அயராத சமூகத் தொண்டினையும் எடுத்துக் கூறி, இன்றைய சூழலில் நம் கழகத்தின் தேவையான பணிகளையும் சான்றுகளுடன் விளக்கி உரையாற்றி நிறைவு செய்தார். ஒன்றிய அமைப்பாளர் இலி.அபிலிங்கேஸ்வரன் நன்றி கூறினார்.
4.11.2026 மாலை 5 மணிக்கு கோவையில் திராவிட மாடல் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்குத் திராவிடர் கழகம் வழங்கும் பாராட்டு விழாவிற்கு ஆசிரியர் அவர்களின் அழைப்பை ஏற்றுச் செல்வதென முடிவெடுக்கப்பட்டது.
தந்தை பெரியார் அவர்களின் 148ஆம் பிறந்த நாளை முன்னிட்டுத் தோப்பூரில் அரங்கக் கூட்டம் கழகச் சொற்பொழிவாளர்களை அழைத்து விரைவில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றியத் துணைச் செயலாளர் த.மவுரியன் சேகுவேரா, ஒன்றியத் துணைத் தலைவர் பு.சு.பிரவின், இலி.தமிழ் பார்வின், த.பேச்சியம்மாள் உட்படத் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.
