பெரியார் அறிவுலகம் கண்ட திராவிட நாயகருக்கு நன்றி பாராட்டு விழா

- Advertisement -

மாபெரும் பந்தல் மேடை அமைக்கும் பணிகள் தீவிரம்

கோவை, நவ. 2- கோவையில் திராவிட  நாயகருக்கு நன்றி பாராட்டு விழா – மாபெரும் பந்தல் மேடை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.

கோவையில் பெரியார் அறிவு லகம் கண்ட திராவிட நாயகருக்கு நன்றி பாராட்டு விழா. 04.11.2026 மாலை வ.உ.சி. மைதானத்தில். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

திராவிட நாயகர் முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு. மானமிகு. மு.க.ஸ்டாலின், அவர்கள் ஏற்புரையாற்ற உள்ளார்.

மாபெரும் விழாவிற்கான மேடை பந்தல் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு மாநகரம் முழுவதும் கழக இலட்சியக் கொடிகள், சுவரொட்டி, விளம்பரப் பணிகள் மற்றும் தீவிர ஏற்பாடுகளை கழக  மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமையில் பார்வையிட்டனர்.

அவருடன் கோவை மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகரன்,  மாநில வழக்குரைஞர் அணி செயலாளர்  கோபி கழக மாவட்டத் தலைவர்  வழக்குரைஞர் மு.சென்னியப்பன், மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, பொள்ளாச்சி மாவட்டத் தலைவர் சி.மாரிமுத்து, மாவட்டத் துணைத் தலைவர் பழ.அன்பரசு, கோவை மாவட்டச் செயலாளர்  வழக்குரைஞர் ஆ.பிரபாகரன், திருப்பூர் மாவட்டச் செயலாளர்  பெ.செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர்  புலியகுளம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தொழிலாளர் அணிச் செயலாளர் இரா.வெங்கடாசலம், மாநகர செயலாளர் புலியகுளம் க.வீரமணி, குறிச்சி ஒன்றியச் செயலாளர் சா.சிவக்குமார், பீளமேடு பகுதி செயலாளர் ம.ரமேஷ், கணபதி பகுதிச் செயலாளர் திராவிடமணி, குனியமுத்தூர் பகுதி செயலாளர் க.தமிழ்முரசு, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சா.ராசா  திராவிட மாணவர் கழக மாவட்டத் தலைவர் த.க.கவுதமன், கோபி மாவட்ட திராவிட மாணவர் கழகச் செயலாளர் த.எழில்அரசு, ச.செல்வகுமார், சுந்தராபுரம் ர.வெற்றிச்செல்வம், இரா.முத்துகணேசன், லூக்காஷ்பீட்டர், ஆட்டோ சக்தி, அருண்,  ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *