3.87 லட்சம் பேர் தேர்வெழுதிய குரூப்-2, 2ஏ தேர்வு: 2 மாதத்தில் முடிவு

- Advertisement -

சென்னை, நவ. 2- தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற குரூப்-2, 2ஏ தேர்வில் 3.97 லட்சம் பேர் கலந்து கொண்டனர். வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தகவல் தெரிவித்தனர். 2 மாதத்தில் முடிவுகள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்தார்.

சார் பதிவாளர், உதவி ஆய்வாளர் உட்பட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 846 பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு மாநிலம் முழுவதும் 1,647 மய்யங்களில் நேற்று (1.11.2026) நடைபெற்றது. தேர்வு எழுத மொத்தம் 4.90 லட்சம் பேர் பதிவு செய்தனர். அதில் 3.97 லட்சம் பேர் (81.1%) கலந்துகொண்டனர். 92,595 பேர் பங்கேற்வில்லை. சென்னையில் 173 மய்யங்களில் சுமார் 50 ஆயிரம் பேர் வரை தேர்வு எழுதினர்.

அரசுத் தேர்வுகளில் ஆள்மாறாட்டத்தை தடுக்க விடைத்தாள்களில் தேர்வர்களிடம் கைரேகை பெறும் நடைமுறை அமலில் உள்ளது. நேற்று (1.11.2026) நடந்த குரூப்-2, 2ஏ தேர்வின்போது சென்னையில் உள்ள ஒரு மய்யத்தில் கண்காணிப்பு அதிகாரிகள் கைரேகைக்கு பதில் தேர்வர்களிடம் கையெழுத்து பெற்றதாக புகார்கள் எழுந்தன. இதனால் அந்த மையத்தில் தேர்வு எழுதியவர்கள் தங்களது விடைத்தாள்கள் திருத்தப்படுமா என்ற அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வர்கள் வலியுறுத்தினர்.

வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கேட்டபோது, “தமிழ் வினாக்கள் மிகவும் கடினமாக இருந்தது. கணிதத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் நன்கு சிந்தித்து பதிலளிக்கும்படி இருந்தன. பொது அறிவுப் பகுதியிலும் சில கேள்விகள் மிகவும் ஆழமாக யோசித்து விடை அளிக்கும் வகையில் இருந்ததால் தேர்வுக்கு கூடுதல் நேரம் தேவைப்பட்டது. சில தேர்வறைகளில் வினாத்தாள் சற்று தாமதமாக வழங்கப்பட்டுள்ளன. வினாத்தாளை சரியாக 9.15 மணிக்கு கொடுக்க டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

தேர்வின்போது  டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு 2 மாதத்தில் முடிவுகள் வெளியிடப் படும்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *