நிர்வாகச் சீர்கேடுகள் களையப்படும் வரை சிதம்பரம் கோயிலை நிர்வகிக்க நீதிபதிகள் தலைமையில் குழு

- Advertisement -

சென்னை அக். 31- சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் நின்று பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதியளித்து அறநிலையத் துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பொது தீட்சிதர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த அரசாணைக்கு ஆதரவாகவும் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் அமர்வில் இந்த வழக்குகள் மீதான விசாரணை நடந்தது. வழக்கு தொடர்ந்த டி.ஆர்.ரமேஷ் மற்றும் மனுதாரர்கள் தரப்பில் வழக்குரைஞர்கள் கே.ஹரிசங்கர், ஜி.சந்திரசேகரன் ஆகியோரும், அறநிலையத் துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்குரைஞர் ஆர்.பரணிதரன், குற்றவியல் வழக்குரைஞர் என்.பழனிவேல் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவு: ‘‘சிதம்பரம் கோயில் நிர்வாகத்தில் உள்ள சீர்கேடுகள் களையப்படும் வரை நிர்வாகத்தை கவனிக்க, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.பாரதிதாசனை தலைவராகவும், முன்னாள் நீதிபதி ஆர்.சுரேஷ்குமாரை இணைத் தலைவராகவும் கொண்ட புதிய இடைக்கால நிர்வாகக் குழுவை அமைக்கிறோம். இந்த குழுவில், முன்னாள் அய்ஏஎஸ் அதிகாரி ராஜேந்திரனை உறுப்பினராகவும், பொது தீட்சிதர்கள் சங்கத்தின் செயலாளர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை செயலர் ஆகியோரை அலுவல்சாரா உறுப்பினர்களாகவும் நியமிக்கிறோம்.

கனகசபையில் நின்று அனைத்து பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்யவும், தேவாரம், திருவாசகம் பாடுவதில் சம வாய்ப்பு வழங்கப்படுவதையும் இந்த நிர்வாகக் குழு உறுதி செய்ய வேண்டும்.

அதே நேரம், அன்றாட பூஜைகள், திருவிழாக்களை நடத்துவது பொது தீட்சிதர்களின் பிரத்யேக உரிமை என்பதால் அதில் நிர்வாகக் குழு தலையிடாது. கோயிலின் அன்றாட வரவு செலவு கணக்குகளை பொது தீட்சிதர்கள் ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதி நிர்வாகக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *