தேனி மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

- Advertisement -

பெரியகுளம், அக். 31- தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 18.10.2026 அன்று காலை 10 மணி அளவில் மாவட்டச் செயலாளர் மோகன் இல்லத் தில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக கலந்துரையாடல்  கூட்டம்   நடைபெற்றது.

துணைத் தலைவர் அழ.மோகன் தலைமை தாங்கினார். தமிழறிஞர் எழுத் தாளர் ராமு வரவேற்பு உரை ஆற்றினார்.

பகுத்தறிவாளர் கழக  மாவட்ட அமைப்பாளர் கண்ணன், தலைமை ஆசிரியர் ஓய்வு செந்தில்குமரன், வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் ஓய்வு பெத்தனசாமி ஆசிரியர் ஓய்வு அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்கள்.

பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக எதிர்காலத்தில் நம்முடைய திட்டங்களையும் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டு அய்ந்து தீர்மானங்களை எடுத்துக் கூறி விளக்க உரையாற்றினார் மாவட்டச் செயலாளர் மோகன்.

நகரம், கிராமங்களில் புதிய உறுப் பினர்களை சேர்த்து பொறுப்பாளர்களை தேர்வு செய்வது,

பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி கொடுப்பது,

கல்லூரி மாணவ மாணவிகளுக்கு வரும் 2027 ஆம் ஆண்டு செப்டம்பர் 17, தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் பேச்சுப் போட்டி ஏற்பாடு செய்து மாநில பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்களை அழைத்து நடத்துவது,

வரும் டிசம்பர் 2ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களது 94ஆம் பிறந்தநாளில் நகரங்களில் இனிப்பு வழங்கி கொடியேற்றுவது,

டிசம்பர் 24ஆம் தேதி அறிவுலக ஆசான் தந்தை பெரியார் நினைவு நாளில் முக்கிய நகர்ப்புறச் சாலைகளில் பதாகைகள் வைத்து அய்யாவின் நினைவு நாளை கடைப்பிடிப்பது எனவும் தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் விஜயராமன் சார்பு துணை ஆய்வாளர் ஓய்வு, மகேஸ்வரன் இன்சூரன்ஸ் கம்பெனி, சையது ரகுமான்,  மணிவாசகர் ஆகியோர் புதிய உறுப்பினர்களாக  இணைந்து கருத்துரை ஆற்றினார்கள்.

நிறைவாக பகுத்தறிவாளர் கழக நகர அமைப்பாளர் கே.எம்.எம்.கண்ணன் நன்றி உரையாற்றினார். வருகை புரிந்த அனைவருக்கும் தேநீர் பிஸ்கட் வழங்கப் பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *