ஆங்கிலத்தில் மட்டும் ‘டெட்’ பாடத்திட்டமா? ஆசிரியர்கள் அதிர்ச்சி!

- Advertisement -

சென்னை, அக். 31- ‘டெட்’ பாடத்திட்டம், ஆங்கிலத்தில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் பாடத்திட்டத்தை வெளியிட வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஒன்றிய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து வகை பள்ளிகளிலும், ஆசிரியராக பணியாற்ற, ‘டெட்’ எனும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். இந்த சூழலில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும், ‘டெட்’ தேர்ச்சி கட்டாயம் என, கடந்த ஆண்டு செப்.,1ஆம் தேதி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.

அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பணியாற்றும் ஆசிரியர்கள், ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற ஏதுவாக, சிறப்பு ‘டெட்’ தேர்வுகள் நடத்தப்படுகின்றன. வரும் டிச., 20ஆம் தேதி, சிறப்பு ‘டெட்’ தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதற்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இடைநிலை ஆசிரியர்களுக்கான, ‘டெட்’ முதல் தாள் தேர்வு, தமிழகத்தில், ஒன்று முதல், மூன்றாம் வகுப்பு வரையிலான, புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்பட உள்ளது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான, ‘டெட்’ இரண்டாம் தாள் தேர்வுக்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழ் பாடத்திற்கான, பாடதிட்டம் தவிர்த்து, மற்ற பாடத்திட்டங்கள் அனைத்தும், ஆங்கிலத்திலேயே வெளியிடப்பட்டுள்ளன. இது, ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

இது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்த பாடத்திட்டமே, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் பாடதிட்டம் வெளியிடுவது தொடர்பாக, உரிய அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *