“கண்டறியப்படாத குழந்தை” பட்டியலி லேயே நீடிக்கும் மீட்கப்பட்ட குழந்தைகள் பற்றியும், உண்மையிலேயே காணாமல் போய் கிடைக்காத குழந்தைகள் பற்றியும் செய்திகள் வந்தவண்ணமே உள்ளன.
அண்மையில் பெண் குழந்தைகள் காணாமல் போனது தொடர்பாக செய்தியை திசை திருப்ப அரசு ஆதரவு கூலி ஊடக நபர்கள் முந்தைய ஆட்சியில் காணாமல் போனவர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
அதில் நன்கு கவனித்தால் 99 விழுக்காடு குழந்தைகள் கிடைத்ததாகப் பட்டியல் தெளிவாக தெரிகிறது.
பிறகு ஏன் பட்டியலில் காணாமல் போனவர்கள் கிடைக்கவில்லை என்ற விவரம் உள்ளது என்பதற்கு விழிப்புணர் வின்மை முக்கியக் காரணியாக உள்ளது.
குழந்தைகள் கோபித்துக் கொண்டோ அல்லது சொல்லாமலோ உறவினர்கள் – நண்பர்கள் வீட்டிற்குச் சென்று விடுவது உண்டு.
குழந்தை பாதுகாப்பாகத் திரும்பியதும், “பிரச்சினை முடிந்துவிட்டது” என்ற எண்ணத்தில் பெற்றோர் காவல் நிலையத்திற்குச் சென்று வழக்கை முடிப்பதைக் கைவிட்டுவிடுகின்றனர்.
குழந்தை தானாகவே திரும்பி வந்துவிட்டது என்பதைத் தெரிவித்தால், “பொய் புகார் அளித்ததாகக் கூறி காவல் துறையினர் தங்களைத் தண்டிப்பார்களோ அல்லது தேவையில்லாத விசாரணைக்கு உட்படுத்துவார்களோ” என்ற தேவையில்லாத பயம் கிராமப்புறப் பெற்றோரிடம் உள்ளது.2.
காணாமல் போன சிறுமிகள் திரும்பக் கிடைத்தவுடன், இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அவர்களின் எதிர்காலப் படிப்பு, திருமணம் அல்லது குடும்பத்தின் கவுரவம் பாதிக்கும் என்ற அச்சத்தில் பெற்றோர் விஷயத்தை அமைதியாக மறைத்துவிடுகின்றனர்.
குழந்தை தங்கியிருந்த உறவினர் அல்லது நண்பர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்து விடுமோ என்ற எண்ணத்திலும் வழக்கை முறைப்படி முடிக்க முன்வருவதில்லை.
கிராமப் பகுதிகளில் இருந்து காவல் நிலையத்திற்கு அடிக்கடி சென்று வழக்கை முடிப்பதற்கான போக்குவரத்துச் செலவு, நேரமின்மை மற்றும் வழிமுறைகள் தெரியாமை ஆகியவை மற்றொரு முக்கியக் காரணியாகும்.
புகார் அளிப்பது போல, குழந்தை கிடைத்தவுடன் “குழந்தை கிடைத்துவிட்டது” என்று எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்து வழக்கை முடிப்பது அவசியம் என்பது பல பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை.
பெற்றோர் குழந்தை கிடைத்த தகவலைக் காவல் நிலையத்திற்குத் தெரிவித்த பிறகும் கூட தூரக் காவல் நிலையங்களில் நீதிமன்றத்திற்குச் சென்று கிடைத்த தகவலை தாக்கல் செய்யவேண்டும் என்ற சோம்பேறித்தனம் காரணமாக சில காணாமல் போன வழக்குகள் அப்படியே கைவிடப்படுகின்றனர். இதனால் அக்குழந்தை தொடர்ந்து “கண்டறியப்படாத குழந்தை” என்ற பட்டியலிலேயே நீடிக்கும்.
இந்தியா முழுவது விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் நூற்றுக்கணக்கான காணாமல் போன வழக்குகள் முடித்து வைக்கப்படாமல் இருக்கக் காரணம் விழிப்புணர்வு இன்மை, அச்சம் மற்றும் காவலர்களின் சோம்பேறித்தனம் போன்றவை ஆகும்.
காணமல் போன குழந்தைகள் குறித்த வழக்கு விவரங்கள் ஆண்டு முழுவதும் பரவலாக உள்ளது.
ஆந்திரா, கருநாடகா, மத்தியப் பிரதேசம் மகாராட்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் குறிப்பாக இந்தியாவில் திருவிழாக் காலங்களில் காணாமல் போகும் வழக்குகள் குவியும் (கிளஸ்டர் ரிகார்ட்) இதற்கு முக்கிய காரணம் சபரிமலை, திருப்பதி, கோலப்பூர், உஜ்ஜைன், ஹூப்லி உள்ளிட்ட நகரங்களில் நீண்ட நாட்கள் நடக்கும் பாதயாத்திரை விழாக்களின் போது குழந்தைகளைப் பிச்சை எடுக்க கடத்துவார்கள்.
இது தொடர்பாக ஜே.தே என்ற பூனேவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஆய்வு செய்து நூல் ஒன்றை எழுதியுள்ளார். இவ்வாறு நூல் எழுதிய ஜே.தே, 2009ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.
தமிழ்நாட்டில் இது போன்ற கிஸ்டர் ரிக்கார்ட் 1980-களுக்குப் பிறகு இருந்ததில்லை. ஆனால், திடீரென விழக்காலங்களில் குழந்தைகள் காணமல் போவது இந்த ஆண்டு அதிகரித்துள்ளது அச்சத்தை ஏற்படுத்துகிறது.
