வடக்குத்து -அண்ணா கிராமத்தில் பெரியாரியல் விளக்க பரப்புரை நிகழ்ச்சி..! இரா.சீனியம்மாள் 8ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்!

1 Min Read
- Advertisement -

வடக்குத்து, அக்.29- வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பக வாசகர் வட்டத்தின் சார்பில் கடலூர் மாவட்ட மேனாள் கழக மகளிரணித் தலைவர் இரா.சீனியம்மாள் 8ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை ஒட்டி பெரியா ரியல் விளக்க பரப்புரைக் கூட்டம் 27.10.2026 அன்று மாலை 6:00 மணி முதல் எட்டு முப்பது மணி வரை மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் தர்மலிங்கம் தலைமையில் மாவட்டத் தலைவர் தண்டபாணி, மாவட்ட துணைத் தலைவர் மணிவேல், பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன் முன்னிலையில் நடைபெற்றது.

மாவட்ட கழக இளைஞரணிச் செயலாளர் டிஜிட்டல் ராமநாதன் வரவேற்புரை ஆற்றினார். மறைந்த சீனியம்மாள் குடும்பத்தினர் மகன் பகுத்தறிவு, சந்திரபாபு மற்றும் தங்க பாஸ்கர் கனகராசு, திருநாவுக்கரசு, ராஜேந்திரன் உரையாற்றினர்.

கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் சிறப்புரை ஆற்றினார். வடலூர் நகர கழக அமைப்பாளர் முருகன் மேனாள் இளைஞர் அணி பொறுப்பாளர் வேலு, நெய்வேலி பாவேந்தர் விரும்பி, வடக்குத்து பாஸ்கர், ஊடக வியலாளர் திராவிடன், வடலூர் கலைச்செல்வி, திமுக தோழர்கள் கோபால், சந்திரமோகன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர். முடிவில் ஒன்றியத் தலைவர் கனகராசு நன்றி கூறினார். இந்நிகழ்ச்சி பெரியார் படிப்பக வாசகர் வட்டத்தின் 106ஆம் மாத நிகழ்வாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *