புதிய கட்டணத்துக்கு ஏற்ப ஆட்டோ மீட்டர்களை மாற்ற ஆறு மாதம் அவகாசம் போக்குவரத்து துறை உத்தரவு!

1 Min Read
- Advertisement -

சென்னை, அக். 29- புதிதாக நிர்யணம் செய்யப்பட்டுள்ள கட்டணத்துக்கு ஏற்ப ஆட்டோ மீட்டரை மாற்ற உரிமையாளர்கள், ஓட்டுநர்களுக்கு 6 மாத அவகாசம் வழங்கி போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் வெளியிட்ட அறிக்கை: போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் கடந்த ஜூலை 9ஆம் தேதி ஆட்டோ ரிக் ஷா சங்கங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கூட்டமைப்புகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஆட்டோ மீட்டர் கட்டணம் மறுநிர்ணயம் செய்ய அலுவலர் குழு அமைக்கப்பட்டது. ஆட்டோ உரிமையாளர்கள், ஓட்டுநர் சங்கங்கள், நுகர்வோர் அமைப்பு களின் கருத்துகள் மற்றும் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் அந்த குழு பரிந்துரைகளை வழங்கியது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் குறைந்தபட்ச பயண தூரம் 1.8 கி.மீ.க்கு குறைந்தபட்சக் கட்டணம் ரூ.50ஆகவும், அதற்கு மேல் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.25, காத்திருப்புக் கட்டணம் நிமிடத்துக்கு ரூ.1 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இரவு நேர கட்டணம் வழக்கமான கட்டணத்தின் 1.5 மடங்கும், மலைப் பாதைக் கட்டணம் வழக்கமான கட்டணத்தின் 1.2 மடங்காகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் 6 மாத காலத்துக்குள் தங்களது கட்டணமானியை (மீட்டர்) புதிய கட்டணத்துக்கு ஏற்றவாறு மறுசீரமைத்துக் கொள்ள வேண்டும்.

அதுவரை போக்குவரத்துத் துறை இணையதளத்தில் உள்ள கட்டண அட்டையை பதிவிறக்கம் செய்து, பயணிகளின் பார்வைக்காக வாகனத்தில் வைக்க வேண்டும். ஆட்டோவில் பார்வைக்கு வைத்துள்ள கட்டண அட்டையில் உள்ள கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, கட்டண அட்டையின் உண்மைத்தன்மையை பயணிகள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

போக்குவரத்துத் துறையின் tnsta.gov.in என்ற இணையதளத்தில் கட்டண அட்டையை பார்வை யிடலாம். அதிகக் கட்டணம் குறித்த 1800 425 5430 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *