ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதிய விபத்து! 68 பேர் உயிரிழப்பு!

1 Min Read
- Advertisement -

மாட்ரிட், அக். 29- ஸ்பெயினில் இரண்டு அதிவேகப் பயணிகள் ரயில்கள் ஒன்றோடொன்று மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். 179-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

ஸ்பெயினின் மத்திய பகுதியில் உள்ள டொலிடோ மாகாணத்தில் உள்ள உர்டா மற்றும் லாஸ் யெபனஸ் பகுதிகளுக்கு இடையே ரென்ஃபே மற்றும் இரியோ ஆகிய இரு வேறு தனியார் மற்றும் அரசு நிறுவனங்களால் இயக்கப்படும் அதிவேக ரயில்கள் ஒரே பாதையில் ஒரே திசையில் பயணித்தன.

அப்போது, பின்னால் வந்த ரென்ஃபே ரயில், முன்னால் சிக்னலில் நின்றிருந்த இரியோ ரயிலின் பின்பகுதியில் அதிவேகமாக மோதியது. இதில், இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு பள்ளத்தில் சரிந்தன.

சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறைச் சரி செய்யும் vபணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் எச்சரிக்கை செய்யத் தவறியதால் ஏற்பட்ட மனிதத் தவறே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தின் போது ரென்ஃபே ரயிலில் 397 பயணிகளும், இரியோ ரயிலில் 147 பயணிகளும் இருந்தனர். இந்த விபத்தில் இதுவரை 68-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 179-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மருத்துவமனையில் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இந்த விபத்தைத் தொடர்ந்து நகரங்களுக்கு இடை யேயான அதிவேக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், “டொலிடோ மாகா ணத்தில் நடந்த ரயில் விபத்து அதிர்ச்சியளிக்கிறது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள் கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *