சென்னை ,அக். 29- ஆந்திர மாநிலம் சிறீஅரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மய்யத்திலுள்ள 2-ஆவது ஏவுதளத்தில் இருந்து நாளை (30.10.2026)இரவு 11.51 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி.-எப்18 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இதில் வழிகாட்டுதல் சேவைக்காக என்.வி.எஸ்-03 செயற்கைக்கோள் பயணிக்க இருக்கிறது.
ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகளுக்கான அதிகாரப்பூர்வ கவுண்ட்டவுன் ஏவுவதற்கு சுமார் 24 அல்லது 26 மணி நேரத்திற்கு முன்பு தொடங்கும். அந்த வகையில், இந்த ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுன் இன்று (29.10.2026) இரவு அல்லது நாளை அதிகாலையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளில் அறிவியலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2021-ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 6 முறை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
